அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-17

“ அக்காலத்தில் ஏரோது அரசன் திருச்சபையினர் சிலரைத் துன்புறுத்த முற்பட்டான். அருளப்பரின் சகோதரரான யாகப்பரை வாளால் கொன்றான் “ – அப்போஸ்தலர் பணி 12 : 1 

இயேசு சுவாமியைக் கைது செய்ய ஒதுழைத்த ஏரோதின் பேரன் ஏரோது அகரிப்பாவால் கைது செய்யப்படுகிறார் புனித சந்தியாகப்பர்..

எரோது அகரிப்பா யூதர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி புனித சந்தியாகப்பரை கைது செய்தான்.

ஏரோது ஏன் அப்போஸ்தலர்கள் எத்தனையோ பேர் இருக்க, திருச்சபையின் தலைவரான புனித் ராயப்பரே இருக்க ஏன் அப்போஸ்தலர்களில் முதலாவதாக பலி தீர்க்கப்பட புனித சந்தியாகப்பரை தேர்ந்தெடுத்தான்?. ஒரு வேளை அதுவே இயேசுவின் திட்டமாக இருக்கலாம்.

புனித சந்தியாகபர் அப்போஸ்தலர்களில் மூத்தவர். வேகமும், வீரமும் அதிகம். சிக்கலான விசயங்களை எளிதில் தீர்த்துவிடுவார். பல துணிச்சலான முடிவுகளை வேகமாக எடுப்பார். திருச்சபையின் தலைவரான புனித ராயப்பர் தன் பங்காளியான புனித சந்தியாகப்பரிடம் கலந்தாலோசித்துதான் முக்கியமான முடிவுகளை எடுத்து வந்தார். திருச்சபைக்கு பெரிய பலமாகவும், மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கும் பெற்று விளங்கியுள்ளார். இது தவர யூதக் கிறிஸ்தவர்களை தலை தாங்கி நட்த்தியுள்ளார். இது புனித ராயப்பரால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆக, புனித யாகப்பரை கொன்றுவிட்டால் மற்ற அப்போஸ்தலர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பயப்படுவார்கள். இதைவிட கிறிஸ்தவர்கள் அல்லாத யூதர்களை மகிழ்ச்சிப்படுத்தவே அவன் மிகவும் விரும்பினான். அதனால் புனித சந்தியாகப்பரை கைது செய்கிறான்.

இந்த ஒன்றை வைத்தே புனித சந்தியாகப்பர் ஆற்றிய நற்செய்திப் பணியும், அவர் ஆற்றிய அற்புதங்களும் எளிதாக விளங்கும். தன்னை கைது செய்த போது மன மகிழ்ச்சியோடு ஒத்துழைக்கிறார். தான் இயேசுவுக்காக மரிக்க இருப்பதை நினைத்து பேறுவுவகை கொள்கிறார். அது அவர் திரு முகத்தில் மகிழ்ச்சியாக வெளிப்பட்டது. “ நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களாலும் குடிக்க முடியுமா? “ என்று இயேசு இவரையும், இவர் சகோதரனையும் பார்த்து கேட்ட போது, “ முடியும் “ என்று தைரியமாக சம்மதித்தது, நிறைவேற போகிற மகிழ்ச்சிதான் அது.

அந்த மகிழ்ச்சிதான் தன்னை கொலைக் களத்திற்கு கூட்டி கொண்டு போனவனை மனம் திருப்பியது.

அதேபோல் அவருடைய வேதசாட்சி மரணத்திற்கு பிறகு அவருடைய திருச்சரீரம் அற்புதமான வகையாய் சம்மனசுக்களால் ஆளில்லா படகில் வைத்து ஸ்பெயின் தேசத்திற்கு கடவுளின் திட்டத்தால் கொண்டு செல்லப்பட்டது. மரித்தது ஒரு இடத்தில் அவரது உடல் இருந்தது வேறொரு இடத்தில்.

ஜெபம் : எங்கள் தூய யாகப்பரே ! உம் தலைவர் இயேசுவுக்காய் மரிப்பதற்கு உமக்கு இருந்த அகமகிழ்ச்சியை கண்டு பூரிப்படைகிறோம். ஒரு துன்பம் வருகிறது அதுவும் கிறிஸ்துவுக்காக வருகிறது நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும் ஆனால் அது எங்களால் முடியவில்லையே ஏன்?. இறைவன் இயேசுவுக்காக எவ்வளவு துன்பப்பட்டீர். அவருக்காக உம்மையே அர்ப்பனித்தீர். எங்களைப் பொறுத்தவரை சின்ன துன்பமென்றாலும் துவண்டு விடுகின்றோம். இறைவனை மறந்துவிடுகின்றோம். சிலுவையிலேதான் மீட்சியுண்டு என்று நீங்களும், எல்லா புனிதர்களும் கண்டு கொண்டீர்கள். எங்களுக்குக்கும் எங்கள் சிலுவைகளை மகிழ்சியோடு சுமக்க வரம் தாரும். அதன் மூலம் இயேசுவையும் கண்டு கொள்ள அருள் தாரும்- ஆமென்    

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு