கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 16

ஏழையாகயும், எளிமையாகவும் பிறந்த இயேசுவை பணக்காரராகாவும், கோடீஸ்வராகவும் மாற்ற வேண்டாம். நாங்கள் குடில் வைக்க லட்சக்கணக்கில் பணம் செலவு செய்வோம்.. அவனை விட, அவளை விட, அந்த அன்பியத்தை விட, அந்த தெருவை விட, அந்த ஊரை விட நாங்கள்தான் அதிகமாக செலவு செய்து பிரமாண்டமாக குடில் எத்தனை லட்சங்கள் பறந்தாலும் பரவாயில்லை.. 

மாட்டுத்தொட்டிலில் ஆடு மாடுகளுக்கு மத்தியில்.. தீவனத்தொட்டியில் பிறந்த நம் சர்வேசுவரனின் பிறந்த நாளை இப்படியா கொண்டாடுவது.. இதையா இயேசு விரும்புகிறார்... இப்படிச்செய்தால் இயேசு மனம்குளிர்ந்துவிடுவாரா...

நம்மை நிற்க வைத்து இப்படிக்கேள்வி கேட்க மாட்டார்?..

"மாட்டுத்தொட்டியில் பிறந்த எனக்காக இத்தனை லட்சங்கள் செலவழிப்பீர்களா.. நல்ல வேளை என்னைப் பிதா மாட மாளிகையில் பிறக்க விடவில்லை.. அப்படிப்பிறந்திருந்தால்...உங்கள் சொத்தையே அழித்திருப்பீர்களோ?

நான் ஆஸ்திக்கும், அந்தஸ்த்துக்குமா பிறந்தேன்.. உன் ஆன்மாவை மீட்கவல்லவா பிறந்தேன்.. கடைசியில் நோக்கத்தை விட்டுவிட்டு அடையாளத்தை மட்டும் பிடித்துக்கொள்வீர்களோ...

கடைசிவரை உன் ஆடம்பர குடிலில்தான் என்னைப் பிறக்க வைப்பாயோ.. உன் ஆன்ம குடிலை எனக்கு தரவே மாட்டாயோ.. அப்படியென்றால் உன் ஆடம்பர குடில் எனக்குத்தேவையில்லை.. உன் அடையாளகுடிலை நீயே வைத்துக்கொள்..

எது அடையாளம்? நல்ல கிறீஸ்தவன் என்பதுதானே.. எனக்கு பிரமானிக்கமாய் இருப்பதானே..

தூய கிறிஸ்தவ வாழ்கைதானே முதல் நற்செய்திப்பணி.. எனக்கு உண்மையாய் இருப்பதுதான் உன் அடையாளம்...

சரி விசயத்திற்கு வருகிறேன்..நீ வைக்கும் குடிலில் நான் பிறக்க வேண்டும் அவ்வளவுதானே.. அது நீ வைக்கும் எளிய குடிலாகஇருந்தாலும்..பிரமாண்டமான குடிலாக இருந்தாலும் சரி... உனக்காக பிறக்கிறேன்... ஆனால் ஒரு கண்டிசன்.. நீ உன் பாவத்தை விட்டுவிடு.. உன் வரட்டு கௌரவத்தை விட்டு விடு..பிடிவாதத்தை விட்டுவிடு...உன் தீய குணத்தையெல்லாம் விட்டுவிடு.. பசாசை விட்டுவிடு..

தாழ்ச்சியை அணிந்துகொள்.. தூய உள்ளத்தோடு வாழ்.. உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி..உன்னைப்போல பிறரையும்..நிணை..நான் உனக்காக என்னையே கொடுத்தேன்.. நீ எனக்காக என்ன கொடுத்தாய் சொல்... நான் உன்னிடம் பணத்தையும் பகட்டையும் கேட்கவில்லை உன்னிடம் உள்ளதை கேட்கவில்லை.. உன் உள்ளத்தைக் கேட்கிறேன்.. உன் ஆன்மாவில் வாழதானே ஆசிக்கிறேன்.. இடம் தருவாயா... அதற்கு நீ நோ சொன்னால்.. நானும் உனக்கு விசயத்திலும் நோ தான் சொல்வேன்... நீ தலை கீழ் நின்னாலும்.. உன் ஆடம்பர குடிலில் நான் பிறக்கவே.. மாட்டேன்

இயேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க..

5 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.