மனுமகன் சேசு பாகம் - 02

“ இருக்கிறவர் நாமே “
யாத்திராகமம் (வி.ப) 3 : 14

ஏற்கனவே இருக்கும் கடவுள் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்?

அதற்கு முன் மீண்டும் சின்ன குறிப்பிடம்..

சர்வேசுவரன் எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருப்பது எப்படி?

பரலோகத்தையும் பூலோகத்தையும் அவைகளடங்கிய சகலத்தையும் படைத்து காப்பாற்றுகிறதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்..

இன்னொருமுறை வாசிக்கவும்..

காப்பாற்றுகிறதினாலே என்பதை அடிக்கோடிட்டு வாசிக்கவும்..

ஏன் நமக்கு தேவையற்ற பயங்கள்.. சர்வேசுவரன் நம்மோடு இருக்கும்போது.

அடுத்த கேள்விக்கு போவதற்கு முன்..

ஏற்கனவே இருக்கும் கடவுளின் மகிமையை, வல்லமையை நாம் இன்னொருமுறை யோசித்துப்பார்க்கவேண்டும்..

பரலோகமும் பூலோகமும் அவர் முன் மண்டியிடுகின்றன..

கடவுளின் அனைத்து படைப்புகளும் அவர் முன் தெண்டனிடுகின்றன..

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் நாம் வாழும் பூமி உட்பட அவரின் படைப்புக்கள்.. 

சூரியனை ஒரு இடத்தில்  நிறுத்தி சந்திரனை ஒரு இடத்தில் நிறுத்தி கோள்கள் அனைத்தையும் ஒரு  நேர்கோட்டில் சுழலச் செய்யும் கடவுள் எவ்வளவு பெரிய வல்லமை உள்ளவர்..

இருக்கிறவர் மட்டும் அல்ல இயக்குபவரும் கடவுளே..

அப்பேற்பட்ட கடவுள் அவர் படைத்த படைப்புகளில் ஒன்று சரியில்லையென்றால்.. சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் அதை அப்படியே அளித்துவிட்டு அவர் விரும்பியபடி, அவர் சொல்லியதைக் கேட்கும்படி எத்தனையோ அழகிய படைப்புகளை அழகழாக படைக்க முடியும்.. அப்படித்தானே?

ஆனால் அப்படி செய்யாமல் ஒரே ஒரு படைப்பிடம் மட்டும் ஏன் அளவற்ற அன்பும், இரக்கமும் காட்ட வேண்டும்..?

இப்போது மீண்டும் முதல் கேள்விக்கு செல்வோம்..

கடவுள் என்பவர் யார் ?

எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த அரூபியே கடவுளாகும்..

எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த அதாவது பரிசுத்த அரூபியாயிருக்கிறார்..

அந்த நற்குணங்களில் இரக்குமும், அன்பும் இருப்பதால் இன்று வரை மனித இனத்தை முழுவதுமாக அழிக்காமல் இருக்கிறார்..

அதனால்தான் மனிதன் இன்னும் ஆணவம் தலைக்கேறி ஆடிக்கொண்டிருக்கிறான்..

சரி இந்த மனிதன் யார்?

சின்ன குறிப்பிடத்தில் உள்ள 15 – வது கேள்வி-பதிலே அதற்கு விடையாகும்.

சர்வேசுவரன் படைத்தவைகளில் பிரதான வஸ்துக்கள் என்ன? முக்கியமானவை எவை?

சரீரமில்லாத சம்மனசுக்களும், ஆத்துமமும் சரீரமும் உள்ள மனிதர்களும்தான்..

நன்றாக கவனிக்கவும் ஆத்துமமும், சரீரமுள்ள மனிதர்கள்தான்.

எங்கிருந்து/ யாரிடமிருந்து நாம் ஆத்மாவை பெற்றோம்..

நம் ஒவ்வொருக்கும் நன்றாக தெரிந்த பதில்தான்..

கடவுளிடமிருந்து..

ஆனால் நம் அந்த ஆன்மாவை எப்படி வைத்திருக்கிறோம்..

இப்போது 18 கேள்விக்கு வருவோம்..

சர்வேசுரன் மனிதர்களை எதற்காகப் படைத்தார்?

தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும் அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்..

அதில் ஒன்றாவது நம்மிடம் இருக்கிறதா? நம் நோக்கமாக இருக்கிறதா?

இவைகளை மாத்திரம் விட்டுவிட்டு மற்ற அனைத்தும் நம்மிடம் இருக்கிறது..

இத்தனை நாம் செய்தும் நம் சர்வேசுவரன் பொறுமை காக்க காரணம் என்ன?

இந்த சிந்தனைகளோடு கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !