மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -1 : மாதாவை நேசிப்போம்..
புனிதருக்கு வயது நான்கு. தான் பத்திரமாய் போற்றி பாதுகாத்து பயன்படுத்திய ஜெபமாலையை தன் இளைய சகோதரி விரும்பிக்கேட்டு அடம்பிடித்தார். தாய்ச்சொல் கேட்டுத் தன் ஜெபமாலையைக் சகோதரிக்குக் கொடுத்துவிட்டார். தன் தாய் கொடுத்த அன்னை மரியாயின் திருவுருவத்தை தன் மரணம் வரை வைத்திருந்தார்.
69 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவார் :
“ என் சிறு வயது எண்ணமெல்லாம் அன்னை மரியாயைப்பற்றியே இருந்தன. அவரைப்பற்றி அறியுமுன்னரே அவரை நான் நேசித்தேன் “
சிறுவயதிலேயே மூவேளை ஜெபத்தை முழந்தாழ்படியிட்டு ஜெபிப்பார். ஒவ்வொரு மணி நேரத்தையும் ஜெபித்து புனிதப்படுத்தும் பழக்கத்தை தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்டார்.
மாதா பிராத்தனையை மனப்பாடமாகச் சொல்லி ஜெபிப்பார். நான்கு வயது சிறுவனாய் இருந்தபோது தன் தாயுடன் தினமும் கோயிலுக்குச் செல்வார் திருப்பலி ஒப்புக்கொடுக்க..
“ கன்னிமரியாவுக்கு ஏதேனும் தர என்னையே விற்க வேண்டியிருப்பினும் துணிந்திடுவேன் “
அமல அன்னையைக் குறித்து திருச்சபையின் படிப்பினை முதன்முதல் அறிவிக்கப்படும் முன் மேற்கண்ட வார்த்தைகளை 1854 நவம்பரில் உதிர்த்தார் புனிதர்…
அதே போல் 19.09.1846- ல் பிரன்ஸ் நாட்டின் சலேத் என்னும் ஊரில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிக்கும், சிறுவனுக்கும் மாதா காட்சி தந்து, “ தெய்வ நிந்தனை செய்வோருக்கும், ஞாயிறு கடனை அவமதிப்போருக்கும் எதிராக எழுந்துள்ள கடவுளின் கோபத்தையும், ஜெப, தவ, பரிகாரத்தின் அவசியத்தையும் “ அன்னை வலியுறுத்திக்கேட்டது புனிதரின் செவிக்கும் எட்டியது. பின் அதைப்பற்றி உரக்கவும் பேசினார்..
நன்றி : நூல், “ அறிமுகம் தேடும் புனிதம் “, ஆசிரியர்கள் : அருட்தந்தை பி.பெரிய நாயகம், அருட்தந்தை ஜெயசீலன்..
எத்தனையோ புனிதர்கள் வாழ்வில் நம் அன்னை பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். நாமும் அன்னையை நேசிப்போம்..
அன்னையின் அன்பை, துணையை, பாதுகாப்பை பெற அனுதினம் ஜெபமாலை ஜெபித்து அன்னையை மகிமைப்படுத்துவோம்…
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !