சம்மனசுகளின் விருத்தம்!

மிக்கேல் சம்மனசு விருத்தம் :-


     சத்யமெனும் ஞானமறை முறை தப்பாது
     தாரணியோ ரறிந்து கதி சேர்வதற்கு
    பத்துரையை மோயீசனால் யார்க்கும் ஈந்த
    பராபரனின் அதி தூதனாகத் தோன்றி
    சாத்தானாம் செனுமலகைத் தலை மிதித்து
    சகலர் செய்யும் பாவ புண்ணியந் திராசில் தூக்கி
    வெற்றி பெறும் சம் மிக்கேல் எனப் பேர் பெற்ற
    விபரமா மெனுது திரு நாம மாமே.


கபிரியேல் சம்மனசு விருத்தம் :-

     முன்னாத னேவகனி யாருந்து பாவ
     மூவினையின் துயர் நீற்பித் முதல்வனாதி
     நன்னயம் சேர் சுதனிரண்டாமாளய்த் தோன்றி
     நானிலத்தில் மனுவுருவாய் பிறப்பதற்கு
     அன்னாளிற் பிதாவினாற் தெரிந்த தேவா
      அன்னையெனும் மாரோக்கிய மரிய வானே
      கன்னி மரியாட்கு மங்களமே சொன்ன
      கபிரியே லெனது திரு நாம மாமே.


இரஃபேல் சம்மனசு விருத்தம் :-

   ஆதியருளாவிகள் நோயாளர்கட்கு
   அமல மிகுந்தருள் தவுள்தம் அன்பாய் ஈன்று
   பூதலத்தில் துயர் நீற்ற தொபியாசு என்ற
   புத்திரர்க்குத் துணை புரிந்தா தரவே நீடி
   மாத ஏவாய் பெரிய தொபியாசுவுக்கு
   வளர் விழிநோய் இருளகற்ற வரம் சிறந்த
   தீதனுகா தேவ சஞ்சீவியான
   செய முயர்ந்த இரவ் வேலன் நாம மாமே.