அவருக்கு சேசு என்னும் பெயரிட்டார்கள்.

சன்மார்க்க போதகம் என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசு ரன் மனிதனாய்ப் பிறந்த எட்டாம் நாள் அவருக்கு ''சேசு'' என்னும் பெயரிட்டார்கள். சேசு என்பதற்கு நம்மை இரட்சிக்கிறவர் என்று அர்த்தம். இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்படிப்பினை உண்டு. ஒரு பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் வினவக் கூடும். பெயரில்தான் சகலமும் அடங்கியிருக்கிறதென்று சொல்வது பொருந்தும். நமது ஆண்டவர் மனிதாவதாரம் ஆனதின் முழுக்கருத்தும் அவரது பெயரில் அடங்கியிருக்கிறது.

பழைய ஏற்பாட்டு ஒழுங்குப்படி, விருத்த சேதனச் சடங்கு செய்து கொண்ட தினத்தில் குழந்தைக்குப் பிற்காலத்தில் வழங்க வேண்டிய பெயரையும் கொடுத்தார்கள். புதிய ஏற்பாட் டின் ஒழுங்குப்படி, ஞானஸ்நானம் கொடுக்கும் போது குழந்தைக்குப் பெயர் இடப்படுகிறது. இந்தப் பெயர் ஓர் அர்ச்சியசிஷ்டவரின் பெயராயிருப்பது தகுதியானது (தி. ச. 761). யாருடைய பெயரைத் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அர்ச்சியசிஷ்டவரின் விசேஷ புண்ணியங்களை நாமும் கண்டுபாவித்து, அவரது உதவியைத் தேடி, அவரைப் போல் நாமும் தேவ தரிசனத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும் பாக் கியத்தை அடைய முயல்வதற்கு இந்த அர்ச்சிய சிஷ்டவரின் பெயர் ஒரு தூண்டுதலாயிருக்கும் என்பதே திருச்சபையின் கருத்து.

1. காரியம் இவ்விதமிருக்க, தினேஷ், அபிதா, கவிதா, ராஜேஷ் போன்ற பெயர்கள் எந்த அர்ச்சிய சிஷ்டவரைக் குறிக்கின்றன? இத்தகைய பெயர் உள்ளவர்கள் எந்த அர்ச்சியசிஷ்டவர்மீது விசேஷ பக்தி கொண்டிருப்பார்கள்? இதெல்லாம் செல்லப் பெயர், ஸ்டைலான பெயர் என்பார்கள். இந்தப் பெயர்களையே ஞானஸ்நானப் பெயராகவைக் கிறார்கள், அல்லது ஓர் அர்ச்சியசிஷ்டவர் பெயரை இட்டாலும், அதைப் பயன்படுத்த மறந்து விட்டு, 'சந்தோஷ்' என்பதை மட்டும் சொல்லி வருகி றார்கள். திருமண சமயத்தில் ஞான ப ஸ்நானப் பெயர் எ ன் ன எ ன் று கேட்டால் தாய்க்கும் தெரியாது, தந்தைக் : கும் தெரியாது, என பிள்ளைக்கும் தெரி யாது ; இ ந் த ப நிலைமையில், ஞான ஸ்நானத் தேதியைத் தேடிப் பார்ப்பது அசாத்தியம் என்று சொல்லத் தேவையில்லை. மேலும் ஞானஸ்நானப் பெயரே என்னவென்று அறியாமல் வளர்பவர்கள், தாங்கள் பின்பற்ற வேண்டிய ஓர் அர்ச்சியசிஷ்டவரின் பாதுகாவ லின்றி வளர்வது எவ்வளவு பரிதாபமானது!

2. வீட்டில் கூப்பிடுவதற்காக, செல்லப் பெயர் ராகவோ, வீட்டுப் பெயராகவோ ஒரு பெயரை ஞானஸ்நானப் பெயரோடு சேர்த்துக் கொள் வதில் தவறில்லை. 'சேர்த்துக் கொள்வதில் என்பது ஏனெனில், அதை மட்டும் வைத்துக் கொள்வது பொருத்தமற்றதுமன்றி, திருச்சபை யின் கருத்துக்கு விரோதமானது. இடும் பெயர் எதுவாயினும், குழந்தை வாய் திறந்து பேச ஆரம் பிக்கும்போதே, அதன் ஞானஸ்நானப் பெயர் சொல்லி அழைத்து, புத்தி விபரம் வந்ததும் அதைச் சொல்லிக் காட்டிப் பள்ளிக்கூடத்தில் பதிவு செய்யும்போது, ஞானஸ்நானப் பெயர் ரைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த தேதி, ஞானஸ்நானத் தேதி, இட்ட பெயர் போன்ற விவரங்களைக் குடும்பப் புத்தகம் ஒன்றில் குறித்து வைத் திருப்பது மிகவும் பயனுள்ள நல்ல வழக்கம். இந்த வழக்கத்தை அனுசரித்தால், ஞானஸ்நானப் பதிவைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படாது; ஞானஸ்நானப் பெயரும் மறந்து போகாது; பள்ளிக்கூடப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்வதால், பிற்காலத்தில் எப்போதும் அது பயன் தரும்.

பிள்ளைகளுக்கு ஏழு, எட்டு வயது நடக்கும் போதே தங்களுக்கு ஞானஸ்நானத்தில் இட்ட பெயரைத் தெரிந்து கொண்டு, அந்தப் பெயருக் குரிய அர்ச்சியசிஷ்டவர் யார், அவர் எங்கே பிறந்தவர், எத்தகைய வாழ்வு நடத்தினார், எந்தப் புண்ணியங்களில் சிறந்து விளங்கினார் என்ற விவரங்களை அவர்கள் அறிந்து கொள் வதற்குத் தக்க வழிவகைகளைக் கையாள வேண்டும். சிறு வயதிலிருந்தே தங்கள் பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டவர் மீது அவர்களுக்குத் தனி பக்திப் பற்றுதல் உண்டாக வேண்டும். அவரது திருநாளை வருடந்தோறும் பக்தியுடன் கொண்டாட வேண்டும். அன்று பூசை கண்டு, திவ்ய நன்மை உட்கொண்டு ஒப்புக்கொடுத்து, அந்த வருட முழுவதும் தங்களைப் பாதுகாக் கும்படி அவரை மன்றாடுவது கிறீஸ்தவர்களுக் குரிய நல்லொழுக்கமாகும். திருநாளுக்கு முந்தின நாள் இதைத் தன் பிள்ளைக்கு ஞாபகப்படுத்து வது நல்ல தாயின் கடமையாகும். இவ்வாறு வருடந்தோறும் தங்கள் பெயர் கொண்ட அர்ச்சிய சிஷ்டவரின் திருநாளைக் கொண்டாடுவோர் அவரது புண்ணியங்களைக் கண்டு பாவிக்க ஆசை கொள்வார்கள் என நம்ப இடமுண்டு.

3. பிள்ளைகள் சேட்டைகள் செய்யும் போது ''அப்பா ஜோசப், சூசையப்பர் இப்படிச் செய்வாரா? அவர் பெயருக்கு அவமானம் வருவிக்காதே. தெரேஸ், குழந்தை தெரேசம்மாள் தன் பெற்றோரிடம் எவ்வளவு அன்பும் கீழ்ப்படிதலும் உள்ளவளாயிருந்தாள். உலக ஆடம்பரத்தை வெறுத்துத் தள்ளினாளே. அந்த வாடாத புஷ்பத்தின் பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறு ஆங்காரியாக நடப்பது உனக்கு வெட்கமில்லையா?" என்று தாய் சொல்லலாம். அநேக பிள்ளைகளுக்குக் கடுகடுத்த வார்த்தைகளை விட இப்படி ரோஷம் உண்டாக்கும் வார்த்தைகள் அதிகப் பயன் விளைவித்து, அவர்களது நடத் தையைத் திருத்த உதவும். ஒவ்வொரு அந்தஸ்திலுமிருந்து அர்ச்சியசிஷ்டவர்களான வர்கள் இருக்கிறார்கள். கன்னியர், திருமண மானவர்கள், விதவைகள், சிறுவர், சிறுமிகள், வாலிபர்கள், வயோதிகர்கள், துறவிகள், குருக்கள், தபோதனர், வேதசாட்சிகள், படித்தவர், பாமரர், ஏழைகள், அரசர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயம் செய்தவர்கள், எல்லா வகுப்பினரிலும் அர்ச்சியசிஷ்டவர் களுக்குக் குறைவில்லை. உன் அந்தஸ்துக்கும் உனது குழந்தையின் பிற்கால உத்தேசமான நோக்கத்துக்கும் இசைவாக ஓர் அர்ச்சிய சிஷ்டவரைத் தெரிந்து கொள்ள முடிந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செல்வ துரை, ராஜதுரை என்று எனக்கு ஏன் பெயர் கொடுத்தார்கள் என்று பிற்காலத்தில் கேட்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்விதம் கேட்பது நியாயம்தானே?

ஆதலால் பெற்றோரே, பெயரில் என்ன இருக்கிறது என்று இனிமேலும் சொல்லாதீர்கள். பிள்ளைக்கு இட வேண்டிய பெயரைத் தேர்ந்தெடுப்பதில் சிறிதாவது ஆலோசனை வேண்டும். சொல்லுக்குச் சிறப்பாகவும், காதுக்கு இனிமையாகவும் இருந்தால் போதுமென்று நினைக்காதீர்கள். மேலே சொல்லிய விவரங் களின் கருத்தைக் கண்டுணர்ந்து உங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த பெயரைத் தேர்ந் தெடுத்து, அதை நடைமுறையில் பயன்படுத்தி வருவீர்கள் என்றால், பிள்ளை வளர்ப்புக்கு இது பயன்படுவதுமன்றி, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பிற்காலத்தில் ஆறுதலும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை . உங்கள் பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டவரை நேரில் கண்டு அவரைப் போல் தேவ தரிசனத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆவலுடன் வாழ்ந்து, இறுதியில் அதைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கிடைப்பதாக.

மரியாயே வாழ்க!