நம் திவ்ய அன்னை பற்றிய தந்தை பியோவின் போதனைகள் 5 :

ஜெபமாலை இராக்கினி…

மாதாவைப் பற்றி அவர் கூறிய சில குறிப்புகள் :

“ பரிசுத்த கன்னிகை கடவுளைச் சென்றடையும் குறுக்கு வழியாக இருக்கிறார்கள் “

“ மரியாயின் கரங்களில் உங்ககளை அர்ப்பணித்து விட்டு கவலைப் படாமல் இருங்கள். அவர்கள் உங்களைக் கவனித்துக் கொள்வார்கள் “

லூர்து நகருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பாத்ரே ஒனோராட்டோவிடம்:

“ நான் பலமுறை லூர்துக்குப் போயிருக்கிறேன். எனக்குக் காரோ, இரயிலோ தேவையில்லை. எனக்கு வேறு வழிகள் இருக்கின்றன.“ என்றார்.

ஜெபமாலை :

“ ஜெபமாலை ஜெபியுங்கள். அதை எப்போதும் ஜெபியுங்கள் “ என்று பாத்ரே பியோ அடிக்கடி அறிவுறுத்தி வந்தார்.

அவரை நன்கு அறிந்திருந்த ஒருவர் அவரைப் பற்றி இவ்வாறு கூறினார் :

“ மடத்திலும் கூடங்களிலும், படிக்கட்டுகளிலும், சாக்றீஸ்தியிலும், ஆலயத்திலும், பாவசங்கீர்த்தனம் கேட்கச் செல்லும் போதும், அங்கிருந்து திரும்பி வரும் போது கூட, பாத்ரே பியோ எப்போதும் தம் கரத்தில் ஜெபமாலை வைத்திருப்பதையும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் ஜெபமாலை ஜெபிப்பதையும் நாங்கள் எப்போதும் கண்டோம்.”

மற்றொருவர் தொடர்ந்து :

“ அவரது வாழ்வின் முடிவில், இனி அவரால் பேச முடியாது என்ற நிலை வந்தபின் நாங்கள் எங்கள் எண்ணங்களை அவரிடம் கூறி அவருடைய உதவியைக் கேட்டோம். பதிலுக்கு அவர் செய்ததெல்லாம் எப்போதும், எப்போதும் ஜெபமாலையை எடுத்து எங்களுக்கு காட்டியதுதான். “ என்று அறிவிக்கிறார்.

“ எல்லா வரப்பிரசாதங்களும் ( அருள்களும் ) மாமரியின் கரங்கள் வழியாகவே நமக்கு வருகின்றன “ என்று பாத்ரே பியோ கூறினார்.

தம் ஞான மகள்களுக்கும், மகன்களுக்கும் அவர் கூறியது :

“ உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் முழுவதிலும், உங்கள் வாழ்வின் கடமைகளை முடித்த பிறகு, நீங்கள் முழந்தாழிட்டு ஜெபமாலை ஜெபிக்க வேண்டும். திவ்ய நற்கருணைக்கு முன் அல்லது ஒரு பாடுபட்ட சுரூபத்திற்கு முன் இருந்து ஜெபமாலை சொல்லுங்கள்.”

நம் பரிசுத்த அன்னையே ஒரு முறை பாத்ரே பியோவிடம் ஜெபமாலையைக் காட்டி, “ இந்த ஆயுதத்தைக் கொண்டு நீ வெற்றி பெறுவாய் “ என்றார்கள்:

ஜெபமாலையின் வல்லமையை நன்கு உணர்ந்தவராக, பாத்ரே பியோ எப்போதும் தம் கரங்களில் அதை வைத்திருந்தார். அவரது மரணம் நெருங்கிய போது, தம் ஞானக் குழந்தைகளுக்கு :

“ நம் அன்னைக்கு அன்பு செலுத்துங்கள். மற்றவர்களும் அவர்களுக்கு அன்பு செலுத்த தூண்டுங்கள், எப்போதும் ஜெபமாலை ஜெபியுங்கள் “ என்று அறிவுரை கூறினார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை…ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…”

“ கண்கள் மயங்கி… உடல் ஒடுங்கி… என்னுயிர்தானும் பிரியும் நேரம்…. உன் மடி மீது என் தலை சாய்த்து நின் மகன் பாதம் சேர்த்திடு…தாயே… “

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !