உத்தரிக்கும் ஸ்தலம் -14 :

“அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்” லூக்காஸ் 16 :9)

இயேசு சுவாமியின் நீதியற்ற கண்காளிப்பாளன் உவமையின் உண்மையான விளக்கம்.. ( இது தனிப்பட்ட விளக்கம் அல்ல புனித அகுஸ்தினார் மற்றும் அவரைப்போன்ற பெரிய பெரிய புனிதர்களின் விளக்கம்)

 தலைவன் நீதியற்ற கண்காளிப்பாளன் தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறான். தலைவன் அவனை அழைத்து கணக்கை ஒப்படைக்கச் சொன்னதுமல்லாமல் வேலையிலிருந்து நீக்குகிறான். 

ஆனால் அந்த கண்காளிப்பாளன் கடன்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைத்து கடனைக் குறைக்கிறான்.. இதுவும் தலைவன் உடமைகளை விரயம் செய்வது என்றுதானே அர்த்தம். அப்புறம் ஏன் தலைவன் தன்னுடைய நீதியற்ற கண்காளிப்பனை மெச்சுகிறான். அதுவும் அவன் விவேகமாக நடந்துகொண்டதாகக் கூறி அவனை பாராட்டுகிறான்.

இவற்றைக்யெல்லாம் சொல்லிவிட்டு மேலே குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை அதாவது,

“ அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்” லூக்காஸ் 16 :9)

முடிவில்லாக் கூடாரம் என்பது மோட்சம்தானே..  ஆண்டவர் நண்பர்களை சம்பாதிக்கச் சொல்லுகிறார்.. அப்படியானால் அந்த நண்பர்கள் மோட்சம் செல்லும் முன் ஓரிடத்தில் இருந்திருக்க வேண்டும்தானே.. அது எந்த இடம்? அதுதான் உத்தரிக்கும் ஸ்தலம்.. அநீத செல்வத்தைக் கொண்டு அதாவது பாவத்தின் விளைவான அதன் கூலியான கஷ்ட்டங்கள், துன்பங்கள், இடையூறுகள்,  வேதனைகள் எல்லாவற்றையும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுத்தால்.. நிறைய திருப்பலிகள் மற்றும் ஜெபமாலைகள், தவ பரிகாரங்கள் எல்லாவற்றையும் நாம் அவர்கள் ஆன்ம ஈடேற்றித்திற்காக செய்து ஒப்புக்கொடுத்தால் அதன் பயனாக மோட்சம் செல்லும் உத்தரிக்கும் ஆன்மாக்கள் நமக்காக ஜெபித்து மோட்சத்தில் நம்மை வரவேற்பார்கள்…

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் கடன்பட்டவர்களின் கடனை அந்த அநீத கண்காளிப்பாளன் எப்படி குறைக்கிறான்.. 100 குடம் எண்ணெய் 50 ஆக குறைக்கப்படுவதும், 100 கலம் கோதுமை 80 ஆக குறைக்கப்படுவதும் எதைக்குறிக்கிறது.. அவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்க வேண்டிய வருடங்களை இந்த அநீத கண்காளிப்பான் அதாவது பாவியான அவன் தன்னுடைய பரிகாரம் என்னும் செல்வத்தால் அவர்களுடைய கடனைக் குறைத்து அவர்களை சீக்கிரமே மோட்சத்திற்கு அனுப்புவதால் அவர்கள் அவன் இறக்கும்போது அவனுக்காக ஜெபித்து அவனை உத்தரிக்கும்ஸ்தலத்திற்கு அனுப்பாமல் அவனை முடிவில்லாக் கூடாரமான மோட்சத்தில் வரவேற்கிறார்கள்..

அதே போல் அவனை வேலைவிட்டு நீக்குதல் என்பது அவன் சீட்டைக் கிழிப்பது என்பது அவனுடைய மரணத்தைக் குறிக்கிறது. அதனால் பாவியான அவன் ( நாம்)  பிச்சை எடுத்தல், மண் வெட்டுதல் போன்றவை நரக வேதனையைக் குறிப்பதால் அவன் நரகம் செல்லாதிருக்க அவன் ( நாம்) வாழும்போதே உத்தரிக்கும்ஸ்தலத்தில் இருக்கும் நண்பர்களை ( மரித்த நம் உறவினர், நண்பர்கள், மரித்த குருக்கள்-கன்னியர், யாரும் நினையா ஆன்மாக்களை) சம்பாதிக்க வாழும்போதே பரிகார வாழ்க்கை வாழ அவன் ( நாம்) விவேகத்தோடு செயல்படுகிறான். அதைத்தான் தலைவர் மெச்சுகிறார்..

ஆகையால்,

“ அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்” லூக்காஸ் 16 :

நாம் வாழும்போதே உத்தரிக்கும்ஸ்தல நண்பர்களை சம்பாதித்துக்கொள்வோம்.. அவர்களுக்காக திருப்பலிகள், ஜெபமாலைகள், பரிகாரங்கள், பரித்தியாகங்கள், தவங்கள், தானதருமங்கள் செய்வோம்..

இதுதான் அதன் உண்மையான விளக்கம்.. 

ஆனால் கொடுமை என்னவென்றால்.. அதற்கு பணத்தை அடிப்படையாகக்கொண்டும் அல்லது வேறு எப்படியெல்லாமோ, அதையெல்லமோ விளக்கமாக கொடுப்பதை கேட்கும்போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது..

அது அறியாமையின் விளைவா? அல்லது வேறு ஏதாவது காரணமா தெரியவில்லை..

நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !