புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அருள் நிறைந்த மரியே!

இம்மந்திரத்திர்க்கு மேல்நாட்டு மொழியில் சாதாரணமாய் வழங்கும் மொழி, சம்மனசின் வாழ்த்து அல்லது சம்மனசின் மங்களம் . இச்செபம் பரலோகத்துக்கு உரியது . மகா அழ்ந்த கருத்துக்கள் அடங்கினதாக இருக்கிறபடியால் கன்னித்தாயும் இயேசுவும் தான் இதைச் சரிவரக் கண்டுபிடிக்க முடியும் என்றார் முத். ஆலன் ரோச் . இது மரியன்னைக்குச் சொல்லப்பட்ட மங்களமானபடியாலும், கபிரியேல் வான தூதர் கொண்டு வந்த நற்செய்தியானதாலும் இதன் மதிப்பு உயர்ந்தது.

சம்மனசின் வாழ்த்து தேவதாயைப் பற்றிச் சொல்லக்கூடிய போதனையின் தொகுதி . இதில் இரு பகுதி உள்ளது . முந்தியது தேவதாயின் மகிமையைக் கூறுகிறது . பிந்தியது அவரது நன்மைத்தனத்திளிருந்து அடையக்கூடியவைகளைக் காட்டுகிறது . முதல் பாகத்தில் உள்ளது மகா பரிசுத்த திரித்துவம் மொழிந்தது . மற்றது அர்ச் எலிசபெத்தமாளின் கூற்று . இரண்டாம் பாகம் திருச்சபை அமைத்தது

உலக சரித்திரத்திலேயே அதி உன்னத நிகழ்ச்சி நித்திய வார்த்தையின் மனிதாவதாரம் .அவர் உலகத்தை இரட்சித்து மனிதனுக்கும் , தேவனுக்கும் இடையில் சமாதானத்தை மறுபடியும் நிறுவியவர் . கபிரியேல் மாமரிக்கு மங்களம் கூறியபோது இந்நிகழ்ச்சி நடைமுறையில் வந்தது

சம்மனசின் மங்களத்தில் பிதாப் பிதாக்களுடையவும் , தீர்க்கதரிசிகளுடையவும் , அப்போஸ்தலர்களுடையவும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காணலாம் . வேதசாட்சிக்கு அசையாத உறுதியையும் , பலனையும் இது பொழிந்தது . திருச்சபையின் வேத பாரகர்களுக்கு ஞானம் இது ;ஸ்துதியர்களுக்குப் பிரமானிக்கமும் , துதியர்களுக்கு வாழ்வும் இது . இது வரப்பிரசாத சட்டத்தின் புதிய சங்கீதம் . சம்மனசுக்களுக்கும் , மனிதர்களுக்கும் ஆனந்தம் . பேய்களைக் கலங்கடித்து வெட்கத்தை ஊற்றித் துரத்தி விரட்டும் . காரணம் சம்மனசின் மங்களத்தால் கடவுள் மனிதரானார் , கன்னி கடவுளின் தாயானார் , நீதிமான்களுடைய ஆத்துமங்கள் பாதாளத்திலிருந்து விடுதலை அடைந்தன . மோட்சத்தின் காலி ஆசனங்கள் நிறைந்தன. அத்தோடு பாவம் மன்னிக்கப்பட்டது . நமக்கு வரப்பிரசாதம் வழங்கப்பட்டது . நோயாளிகள் சுகமானார்கள் . மரித்தோர் திரும்பவும் உயிர் பெற்றார்கள் . அகதிகள் வீடு வந்து சேர்ந்தனர் , தமத்திருத்துவத்தின் கோபம் தணிக்கப்பட்டது , மனிதர்கள் நித்திய சீவன் அடைந்தனர்

இறைவனுடைய மகத்துவத்தைப் போல் பெரிது ஒன்றும் இல்லை . பாவத்தின் ஈனத்தைப் போல வேறொரு ஈனமும் கிடையாது . எனினும் நாம் அவருக்குச் செலுத்தும் வாழ்த்துதலையும், விண்ணப்பத்தையும் அவர் தள்ளி விடுவதில்லை . சம்மனசின் மங்களம் ஓர் அருமையான கீதம் . மனிதாவதாரம் இரட்சணியம் என்னும் வரப்பிரசாதத்துக்காக செலுத்தும் நன்றியின் கீதம் . இதில் பிதாவுக்கு மங்களம் சொல்லுகிறோம் . ஏனெனில் அவர்தம் ஏக குமாரனையே நமக்கு இரட்சகராகத் தந்தார். சுதனுக்கு நன்றி கூரிகிறோம். ஏனெனில் வானத்தை விட்டுப் பூமியில் வந்து மனிதராகிய நம்மை இரட்சித்தார். பரிசுத்த ஆவிக்குத் தோத்திரம் புரிகிறோம் . ஏனெனில் கன்னி மரியின் உதரத்தில் நமதாண்டவருக்குப் புனித உடலை உருவாக்கினார். மூவருக்கும் நன்றியரிந்த தோத்திரமாக 'அருள் நிறைந்த மரியே' என சொல்லுகிறோம்

இம்மந்திரத்தில் நேர்முகமாகக் கடவுளின் தாயைப் புகழ்கிறோம் .எனினும் அது தமத்திருத்துவத்திற்குப் பெரும் மகிமை வளர்க்கிறது . தேவதாயைப் புகழும்போது பிதாவின் அருமையான சிருஷ்டியை , சுதனின் அமலோற்பவ மாதாவை பரிசுத்த ஆவியின் பத்தினியைப் புகழ்வதால் திரித்துவத்திற்குப் புகழ்ச்சி தானே ? எலிசபெத்தம்மாள் வாழ்த்தின போது தாய் அந்த வாழ்த்துதலை உடனே கடவுளின் பக்கம் திருப்பினார் அன்றோ ? அது போல் இப்பொழுதும் செய்கிறார் .