பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு. அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன ஒரு அழகிய மாதா சுரூபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான். அந்த சுரூபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுரூபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான்.
ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான். அவனால் முடியவில்லை. எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார்கள். அந்த தேவமாதா சுரூபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்தார்களாம். அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் தேவமாதா சுரூபம் நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை. தேவமாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது. அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56) கபிரியேல் தூதர் எலிசபெத் அம்மாள் கர்பந்தரித்து இருக்கிறார்கள் என்று சொன்னதும் அவர்களுக்கு உதவி செய்ய செல்கிறார்கள் தேவதாயார்
அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது
ஆமாம் இந்த தாய் அன்பை போல இந்த உலகில் ஆதரவும் இல்லை தேவதாய் நம்மோடு இல்லாமல் நமக்கு மீட்பும் இல்லை.