மகிமை தேவ இரகசியத் தியான செபமாலை.

1-ம் மகிமை தேவ இரகசியம் யேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததை தியானிப்போமாக. 
பரலோக மந்திரம்

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். உலகமோ மகிழும். நீங்கள் துன்புறுவீர்கள், ஆனால் உங்கள் துன்பம் இன்பமாக மாறும். (அரு. 16:20)
அருள் நிறை மந்திரம்

நான் உங்களை மீண்டும் காணும் பொழுது உங்கள் உள்ளம் மகிழ்வுறும்." உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து எவனும் பறித்து விட மாட்டான். (அரு. 16:22)
அருள் நிறை மந்திரம்

வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப் படுத்தியிருந்த வாசனைப் பொருள்களை எடுத்துக் கொண்டு கல்லறைக்குச் சென்றனர். (லூக். 24:1)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவரின் தூதர் வானினின்று இறங்கி வந்து கல்லைப் புரட்டி அதன் மேல் அமர்ந்தார். (மத். 28:2)
அருள் நிறை மந்திரம்

வானதூதர் பெண்களை நோக்கி, "அஞ்சாதீர்; சிலுவையில் அறையுண்ட யேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். (மத். 28:5)
அருள் நிறை மந்திரம்

அவர் உயிர்த்து விட்டார். இங்கே இல்லை. இதோ அவரை வைத்த இடம். (மாற். 16:6)
அருள் நிறை மந்திரம்

இதோ! உங்களுக்கு முன் அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள். (மத். 28:7)
அருள் நிறை மந்திரம்

அவர்களும் அச்சத்துடனும் மகிழ்ச்சியுடனும் விரைவாகக் கல்லறையை விட்டு அகன்றனர். (மத். 288)
அருள் நிறை மந்திரம்

உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். (அரு.11:25)
அருள் நிறை மந்திரம்

உயிர் வாழ்க்கையில் என்னில் விசுவாசங் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் (அரு. 11:26)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

2-ம் மகிமை தேவ இரகசியம் யேசு விண்ணகம் சென்றதை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

பெத்தானியாவை நோக்கி அவர்களைக் கூட்டிச் சென்று, கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி கூறினார். (லூக். 24:50)
அருள் நிறை மந்திரம்

விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (மத். 28:18)
அருள் நிறை மந்திரம்

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். (மத். 28:19)
அருள் நிறை மந்திரம்

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுங்கள். (மத். 28:19)
அருள் நிறை மந்திரம்

நான் உங்களுக்கு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். (மத். 28:20)
அருள் நிறை மந்திரம்

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான். (மாற். 16:16)
அருள் நிறை மந்திரம்

இதோ! நான் உலக முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன். (மத். 28:20)
அருள் நிறை மந்திரம்

அப்படி ஆசி கூறுகையில் அவர்களை விட்டு பிரிந்து வானகத்திற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றார். (லூக் 24:51)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவர் யேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

3-ம் மகிமை தேவ இரகசியம் தூய ஆவி தேவ அன்னை மீதும் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்ததை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

பெந்தேகோஸ்தே என்னும் திருநாளின் போது அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். (அப். 2:1)
அருள் நிறை மந்திரம்

தீடீரென பெருங்காற்று வீசுவது போன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி அவர்கள் இருந்த வீடு முழுவதும் ஒலித்தது. (அப். 2:2)
அருள் நிறை மந்திரம்

நெருப்புப் போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கின (அப். 2:3)
அருள் நிறை மந்திரம்

எல்லோரும் தூய ஆவியால் நிரப்பப் பெற்று, தேவ ஆவி அருளியபடி அயல் மொழிகளில் பேசத் தொடங்கினர். (அப் 2:4)
அருள் நிறை மந்திரம்

வானத்தின் கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கியிருந்தார்கள். (அப். 2:5)
அருள் நிறை மந்திரம்

அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்து நின்று மக்களை நோக்கி உரத்த குரலில் பேசினார். (அப். 2:14)
அருள் நிறை மந்திரம்

மனந்திரும்புங்கள். ஞானஸ்நானம் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியால் திருக்கொடையைப் பெறுவீர்கள். (அப். 2:14)
அருள் நிறை மந்திரம்

அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர். இவ்வாறு அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர் சேர்ந்தனர். (அப். 2:41)
அருள் நிறை மந்திரம்

உமது ஆவியை நீர் அனுப்பினால் அவை படைக்கப்படும். உலகனைத்தும் புத்துயிர் பெறும். (சங். 3)
அருள் நிறை மந்திரம்

தூய ஆவியே! எழுந்தருளி வாரும். உமது விசுவாசிகளின் இதயங்களை நிரப்பி, உமது நேச அக்கினி அவர்களில் பற்றி எரிய செய்தருளும்.
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

4-ம் மகிமை தேவ இரகசியம் கன்னிமரியாள் - விண்ணேற்படைந்ததை தியானிப்போமாக
பரலோக மந்திரம்

மகளே! மண்ணுலகம் பெண்களுக்குள் நம் ஆண்டவரால் ஆசி பெற்றவள் நீயே. (யூதித். 13:23)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவரே உன் பெயரை எவ்வளவு சிறக்கச் செய்துள்ளார் என்றால், எல்லா மனிதரும் ஆண்டவருடைய பேராற்றலை என்றென்றும் நினைவு கூர்வது போல் உன்னையும் என்றென்றும் புகழ்வர். (யூதித்.13:25)
அருள் நிறை மந்திரம்

யாக்கோபின் உறைவிடமெங்கும் உன் கடவுளால் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். ஏனென்றால் உம் பெயர் விளங்கும் இடம் எல்லாம் இஸ்ராயேலின் கடவுளும் உம் பொருட்டு மகிமை பெறுவார். (யூதி.1331)
அருள் நிறை மந்திரம்

யெருசலேமின் மகிமை நீ இஸ்ராயேலின் மகிழ்ச்சி நீ. நம் மக்களின் பெருமையும் நீயே. (யூதி. 15 : 10)
அருள் நிறை மந்திரம்

அரசர் உன் பேரழிவை விரும்புவார். அவரே உன் தலைவர். அவருக்கு தலை வணங்கு. தீர் நாட்டு மக்கள் காணிக்கைகள் ஏந்தி வருகின்றனர். மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்.
அருள் நிறை மந்திரம்

விண்ணுலகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப்பட்டது. உடன் படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடி முழக்கமும் நில நடுக்கமும் கனத்த மழையும் உண்டாயின. (திருவெளி11:19)
அருள் நிறை மந்திரம்

விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது. பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள். (திருவெளி. 12:1)
அருள் நிறை மந்திரம்

நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள். தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தான். (திருவெளி. 12:1)
அருள் நிறை மந்திரம்

பன்னிற ஆடையை அணிந்தவளாய் அவள் அரசரிடம் அழைத்து வரப்படுகிறாள். இளந் தோழியரும் அவளோடு உம்மிடம் வருகின்றனர்.(சங். 44 : 14)
அருள் நிறை மந்திரம்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். வியத்தகு செயல்களை அவர் செய்துள்ளார். (சங். 97:1)
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.

5-ம் மகிமை தேவ இரகசியம் கன்னி மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.
பரலோக மந்திரம்

விடிவேளை வானம்போல் எட்டிப் பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள் கதிரவனைப் போல் ஒளி மிக்கவள். (உன்னத சங். 6 :9)
அருள் நிறை மந்திரம்

மகிமையின் மேகங்களில் ஒளிரும் வில்லைப் போலவும், இளவேனிற் காலத்தில் ரோசாப் பூவைப்போலவும், தண்ணீர் ஓரத்தில் இருக்கும் லீலியைப் போலவும், தண்ணீர் ஓரத்தில் இருக்கும் லீலியைப் போலவும் காணப்பட்டாள். (சீராக். 50:8-9)
அருள் நிறை மந்திரம்

நான் அரிய அன்பினுடையவும் அச்சத்தினுடையவும் அறிவினுடையவும் புனித தெய்வ நம்பிக்கையினுடையவும் தாயாய் இருக்கிறேன். (சீராக். 24:24)
அருள் நிறை மந்திரம்

நன்னெறியினுடையவும் உண்மையினுடையவும் அழகெல்லாம் என்னிடம் உண்டு. வாழ்வினுடையவும் புண்ணியத்தி னுடையவும் முழு நம்பிக்கை என்னிடமே உள்ளது . (சீராக். 24 38)
அருள் நிறை மந்திரம்

என்னை நாடுகிறவர்கள் எல்லாரும் என்னிடம் வந்து சேருங்கள். என் கனிகளால் நிரப்பப் படுங்கள். (சீராக்.2426)
அருள் நிறை மந்திரம்

என் அறிவு, தேனை விட இனிப்பாய் இருக்கின்றது. என் உரிமை தேனையும் அதன் இனிய சுவையையும் விட மேலானது. (சீராக். 24:27)
அருள் நிறை மந்திரம்

என் மக்களே! இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள் என் படிப்பினையைக் கேட்டு ஞானிகளாய் இருங்கள். அதை இகழ்ந்து தள்ளி விடாதீர்கள். (பழமொழி. 8:8233)
அருள் நிறை மந்திரம்

நான் சொல்வதைக் கேட்டு, நாள்தோறும் என் வாயிலண்டை விழித்திருந்து, என் கதவு நிலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பவனே பேறு பெற்றவன். (பழமொழி. 8.33:34)
அருள் நிறை மந்திரம்

என்னைக் கண்டு பிடிப்பவன் வாழ் வடை வான் . ஆண்டவரிடமிருந்து மீட்பையும் பெற்றுக் கொள்வான். (பழமொழி. 8:35)
அருள் நிறை மந்திரம்

இரக்கத்தின் அரசியே வாழி! எதிரிகளிடமிருந்து எம்மைக் காத்திடுவீர். எம் மரணத்தருவாயில் எம்மை உம்மிடம் அழைத்திடுவீர்.
அருள் நிறை மந்திரம்

திரித்துவ ஜெபம்
ஓ என் நேச யேசுவே
ஆமென்.