உத்தரிக்கிற ஸ்தலம் உள்ளது என்பது அனைத்து கத்தோலிக்கராலும் சிறிதும் ஐயமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருச்சபையின் ஆதிகாலம் முதல் இது போதிக்கப்பட்டு, வேதாகமம் அறிவிக்கப்பட்டு வரும் இடங்களில் எல்லாம் சிறிதும் சந்தேகமுமின்றி விசுவசிக்கப்பட்டு வரும் சத்தியமாகும்.
மறைநூல் வழியாக இந்த வேத சத்தியமானது வெளிப்படுத்தப்பட்டு, பாரம்பரியமாக சத்திய திருச்சபையினால் போதிக்கப்பட்டு காலங்காலமாக பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளால் நம்பப்பட்டுவரும் உண்மை .
இருப்பினும் பலரும் முன்னர் தெரிவித்தவாறு இந்த அத்தியாவசியமான சத்தியத்தைக் குறித்துத் தெளிவற்ற, மேம்போக்கான கருத்துக்களை உடையவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் வேண்டுமென்றே அபாயகரமான பள்ளத்தாக்கின் உச்சி விளிம்பில் கண்களை மூடிக் கொண்டு நடப்பவர்களுக்கு ஒப்பாவார்கள்.
உத்தரிப்பு காலத்தைக் குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அதனை தவிர்க்கவோ சிறந்த வழிமுறை, உத்தரிக்கிற ஸ்தலத்தை குறித்து தெளிவான கருத்துக்களைக் கொள்வதும், அதனைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதும், முற்றிலுமாக தப்பித்துவிட கடவுள் நமக்குத் தரும் வழிமுறைகளை பின்பற்றுதலுமே ஆகும்.
உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி எண்ணாமல் வாழ்வது நல்லதல்ல. இவ்வாறு இருந்தால், நீண்ட, வேதனை நிரம்பிய காலத்தை நாம் நம் மரணத்திற்குப் பின் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கழிக்க வேண்டியிருக்கும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
உத்தரிக்கிற ஸ்தலம் உள்ளது உண்மையா?
Posted by
Christopher