பாவத்தின் கூலி!

சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள சிட்னி என்ற நகரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் சுய சரிதையை ஒரு செய்தித் தாள் வெளியிட்டிருந்தது. கயவர்களான ஐந்து பேர்களோடு அவன், கொண்டிருந்த உறவு முறிந்து போன காரணத்தால் அந்த ஐந்து பேர்களையும் அவன் கொலை செய்து விட்டான். அதை அவன் செய்த போது, தனக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டதென்றும், அவன் அந்த ஐவரையும் சுட்டுக் கொல்லும் போது, அவன் துப்பாக்கிக் குண்டு பட்டு அவர்கள் இரத்தம் பீறிட்டுப் பாய்வதைப் பார்க்க தனக்கு எவ்வளவு ஆனந்தம் ஏற்பட்டதென்றும் கூறியுள்ளான்.

மனநூல் நிபுணர்கள், இப்படிப்பட்ட இரக்கமற்ற இன்பம் கொள்ளும் மனிதர்களை மனக் கோளாறு பிடித்தவர்கள், மனத்திலும் உணர்விலும் வியாதிப்பட்டவர்கள் என்பார்கள். இவர்களைக் கொலைகாரர்கள் என்று அழைப்பதில்லை; பாவிகள் என்று கூறுவதுமில்லை. ஐந்தாம் கற்பனையை மீறுகிறவர்கள் என்பதுமில்லை.

இப்படிப் படுகொலை செய்தவர்களைப் பார்த்து, "நீ செய்தது கொலைப் பாவமல்லவா?" என்று கூறினால், அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் தெரியுமா? பதிலே கூறாமல் எரிச்சலுடன் மவுனமாயிருப்பார்கள்; அல்லது கொடூரச் சிரிப்பு சிரிப்பார்கள்; அல்லது முறைத்து ஒரு பார்வை பார்ப்பார்கள். அவ்வளவுதான்.

இதே போன்ற பதில்களைத்தான் இன்று தாயின் உதரத்தில் இருக்கும் சிசுக்களைக் கருச்சிதைவு செய்து கொல்லும் டாக்டர்களிடம் எதிர்பார்க்க முடிகிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுவை இப்படிக் கொல்வது கொலைப் பாவம் என்று நாம் கூறினால், இவர்களும் அதே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். வெறும் உலக சம்பந்தமான வாழ்வை மட்டுமே பல ஆண்டுகளாக வாழ்ந்து, வாழ்ந்து, இந்தக் கொடிய மனநிலைக்கு இவர்கள் ஆளாகி விட்டார்கள். கடவுளுக்கு அஞ்சும் எந்த ஒரு மனிதனும் இவ்வாறு சிசுக்களின் உயிரை அழிக்க மாட்டான். மதிப்பிற்குரிய தொழிலான மருத்துவத் தொழிலை எந்த வைத்தியனும் இவ்வாறு இழிவுபடுத்த மாட்டான். அதற்கு முன் அவன் ஜெபிப்பதையும், வேதத்தை அனுசரிப்பதையும் முற்றும் கைவிட் டிருப்பான்.

இங்கு நாம் ஐந்தாம் கட்டளையை அல்ல, முதலாம் கட்டளை யைப் பற்றிய பிரச்சினையில்தான் ஈடுபட்டிருக்கிறோம். ஒருபோதும் கடவுளைப் பார்த்து ஜெபமே செய்யாததினால் மனக்கோளாறு பிடித்து அலைகின்ற மனிதர்களின் கூட்டங்களைப் பற்றிய பிரச்சினையே அது.

தங்கள் செளகரியத்திற்குத் தடையாக இருக்கும் ஒரு குழந்தையின் உயிர் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தக் குழந்தைகள் தங்களையே பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று நேரிடும் கதிதான் தீராப் பிணி யாளர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் நேரிடப் போகும் காலம் வருகின்றது. இதற்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. நம் சமூகத்தின் கொள்கைகளைத் திருத்தி அமைத்து, கடவுள் மேல் மீண்டும் விசுவாசம் கொள்வதுதான் அந்த மருந்து.

நமதாண்டவர் அப்போஸ்தலர்களை ஏன் உலகில் அனுப்பி னார்? கெட்டுப் போன மனித சமுதாயத்தைத் திருத்தும்படியாகவே. மனிதர்களைப் பண்புடையவர்களாக்கி, உயர்த்தி, கிறீஸ்துவுக்கு முன்பிருந்த கொடுமை, மிருகத்தனம் இவற்றிலிருந்து விடுவிப்பதற் காகவே கிறீஸ்து தேவத் திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினார். தவறி விழுந்த மானிடர்கள் தெய்வச் சாயலில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டியதாயிற்று.

எவ்வுண்மையையும் ஏற்க மறுக்கும் ஹக்ஸ்லியும், அவனுடைய ஆதரவாளர்களும் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் என்ன கூறினார்கள்? கிறீஸ்தவ சுவிசேஷம் எடுபட்டு விட்டாலும் கிறீஸ்தவ ஒழுக்கம் தழைக்கும் என்று. இவர்கள் எவ்வளவு தவறிப் போனார்கள் !
கிறீஸ்துவின் சுவிசேஷ போதனைகளை "நாகரீக" மனிதர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். அதன் விளைவாக கிறீஸ்துவுக்கு முன்பிருந்த அநாகரீக காட்டுமிராண்டித்தனம் தானாகவே திரும்பி வந்துள்ளது.

முந்திய கிறீஸ்தவ நாகரீகப் பண்பாட்டை மீண்டும் கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் செய்ய வேண்டியது ஆன்மீக முறையான ஒரு முயற்சி. அர்ச்சியசிஷ்டதனமும், புண்ணிய வாழ்வும் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும். இந்தத் திட்டம் 1917-ம் ஆண்டு பரலோகத்திலிருந்து நேரடியாக நமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த ஆன்மீகத் திட்டம் எவ்வளவு இன்றியமையாதது என்றால், இது இல்லாமல் நாம் இனி வாழ முடியாது. மேலை நாடுகளின் மறுமலர்ச்சிக்கு இதுவே அடிப்படையாகும்.

நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை அடிப்படையிலேயே ஒரு ஆன்மீகப் பிரச்சினை. இது ஒரு ஒழுக்க சம்பந்தமான பிரச்சினை யாகும்.

அடிமைத் தொழிற் சிறைக்கூடங்கள், விஷ வாயுக் கொலை அறைகள், இதற்கு முன் கண்டிராத உலக யுத்தங்கள், பெருந்தொகை யான சிசுக்கள் தாயின் உதரத்திலேயே கொல்லப்படுதல் இவை யெல்லாம், ஒழுக்கக் கேடு எந்த அளவுக்கு வந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. இவையெல்லாம் இருண்ட எதிர்காலத்தையே அறிவிக்கின்றன. தேவதாயின் அதிகாரபூர்வமான வாக்குப்படி, பாவமே யுத்தங்களின் காரணம் என்றால், இப்போது ஒழுக்கம் கெட்டு வரும் மனித சமுதாயம் எத்தகைய கொடிய யுத்தங்களை விளைவிக்கும் என்று நமக்குப் புலப்படும் அல்லவா?

தாய் உதரத்தில் சிசுக்களைக் கொலை செய்யும் ஒருவனிடம் நீ மானிட உயிர்களைக் கொலை செய்கிறாய் என்று நாம் கூறினால், அவன் அதை அலட்சியப்படுத்தி விட்டுப் போய்விடுவான்.

ஆனால் இவ்விதம் கருவிலே சிசுக்களைக் கொல்வது கனமான பாவம் என்றும் அதைச் செய்பவன் அப்பாவத்திற்கு மன்னிப் படையாமல் இருந்தால், கடைசி நாளில் அவனை விழுங்குவதற்கு நெருப்பாலாகிய நரகம் ஒன்று உள்ளது என்றும், அவனுக்குப் புரியும் படி அதிகாரபூர்வமாக யாராவது எடுத்துக் கூறினால், அவனுக்கு ஒரு வேளை அது புலனாகக் கூடும்.

மரண வேளையில் ஒரு மனித ஆன்மா இருட்டிலிருந்து பிரகாசமான வெளிச்சத்தைக் காணும் மரணம் நிகழ்ந்த அந்த இடத்திலேயே இதுவும் நிகழும் என்று கூறப்படுகிறது. இருண்ட ஒரு கொட்டகையிலே திடீரென மேடையின் திரை விலக, அதில் நிரம்பி யுள்ளவற்றை ஒருவன் ஒளி வெள்ளத்தில் காண்பது போல் அது இருக்கும்.

அவன் செய்த பாவங்கள் அவற்றின் உண்மைத்தன்மையிலேயே காட்டப்படும். ஒவ்வொரு பழிபாதகமும், கடவுளின் வரப்பிரசாதத்தை எதிர்த்த ஒவ்வொரு செயலும் அதன் உண்மையான தீய தன்மையில் காணப்படும்.

ஆபேலுடைய சடலத்தை விட்டு காயீன் ஓடியதுபோல் பாவி ஒருவன் இந்தப் பயங்கரத்திலிருந்து ஓடுவான். மறைந்த நீதிபரரின் குரல், "என்னை விட்டு அகன்று போ'' என்று அவன் மீது, அவனுக்கு எதிராக முழங்கும்.

ஒரு காலமும் முடியாத நரக ஆக்கினை இந்த ஆன்மாவை விழுங்கும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு அவரை நித்தியத் திற்கும் புகழ்ந்து பாட படைக்கப்பட்ட ஆன்மா இக்கதியை அடையும்!