விசுவாசமும், நம்பிக்கையும்

உத்தரிக்கிற ஸ்தலம் என்ற ஒன்று இருக்கிறது, அங்கே சிறைவைக்கப்பட்டிருக்கிற ஆத்துமங்களுக்கு, விசுவாசிகள் தங்கள் மன்றாட்டுக்களைக் கொண்டு உதவி செய்கிறார்கள் (திரிதெந்தின் பொதுச்சங்கம், (1545 - 1663) தி. ச. 30, அமர்வு 6 மற்றும் அமர்வு 25).

மரணம் நமக்கு நித்திய ஜீவியத்தின் வாசல் மட்டுமே என்று நம் விசுவாசம் நமக்குக் கற்பிக்கிறது. ஆகவே, மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நம் விசுவாசத்தை நாம் உறுதிப்படுத்துகிறோம். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன், நித்திய ஜீவியத்தையும் விசுவசிக்கிறேன்....

ஆகவே, ஜெபம், மற்றும் நற்செயல்களின் வழியாக, மரித்தவர்களின் ஆத்துமங்களுக்கு நம்மால் உதவ முடியும் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். விசேஷமாக சகல ஆத்துமங்களின் திருநாளன்று, திருச்சபையின் வழியாக நாம் அவர்களை நினைவுகூரும்போதும், மரித்த நம் நண்பர்களை நம் எல்லாச் செபங்களிலும் நினைவுகூர்வது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம், ஒவ்வொரு நாளையும் சகல ஆத்துமங்களின் திருநாளாக நாம் ஆக்கிக் கொள்ளும் போதும், அவர்களுக்கு நாம் பெருமளவுக்கு உதவ முடியும். இதை எப்போதும் நினைவில் கொண்டிருப் போமாக.

"அந்தோ, மரித்த நம் அன்பிற்குரியவர்களை நாம் போதுமான அளவுக்கு நினைவுகூர்வதில்லை, அவர்களு டைய நினைவு, அவர்களுடைய மரணத்தின்போது அடிக்கப்படும் துக்க மணிகளின் ஓசையோடு அடங்கி விடுவதாகத் தோன்றுகிறது" என்று அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார். இது எவ்வளவு உண்மை!

உத்தரிக்கிற ஸ்தலத்தின் காட்சியும் கூட அர்ச். ரிக்ஸி கத்தரீனம்மாள், அர்ச். லிட்வினம்மாள், முத். மாண்ட்டுவா அஸ்ஸேன், முத். பினோஸ்கோவின் வெரோணிக்கம்மாள், உரோமையின் அர்ச். பிரான்செஸ், அர்ச். மார்கரீத் மேரி அலாக்கோக், அர்ச். சியென்னா கத்தரீனம்மாள், கர்த்தூசியரான டெனிஸ், மற்றும் அநேக அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், பரிசுத்த ஆத்துமங் களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் துல்லியமாக ஒரே விதமான காட்சிகளைப் பெற்றுக் கொண்டார்கள். இந்தக் காட்சிகள் கடும் அச்சத்தின் பாதிப்புகளையும், அதன் மூலம் மனந்திருப்பும் வரப்பிர சாதத்தையும் தங்களில் கொண்டவையாக இருந்தன.

ஆகவே, "பாவங்களில் இருந்து இரட்சிக்கப்படும் படி மரித்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுவது பரிசுத்தமும் பிரயோசனமுமுள்ள எண்ணமாயிருக்கிறது'' என்று பழைய ஏற்பாடும், "மரித்தோர் தேவசுதனுடைய குரலொலியைக் கேட்கும் காலம் வருகிறதென்றும், அது இப்பொழுதே வந்திருக்கிறதென்றும், அதைக் கேட் பவர்கள் பிழைப்பார்கள் என்றும் மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (அரு. 5:25) என்று புதிய ஏற்பாட்டில் நம் திவ்விய இரட்சகரும் நமக்குச் சொல்வதால், மரித்தவர்களின் ஆத்துமங்களுக்காக நம்பிக்கையோடு ஜெபிப்பது நமக்கு எளிதாக இருக்க வேண்டும்.

''என்னைப் படிக்காவிட்டால் நீ வருத்தப்படுவாய்,'' ''உத்தரிக்கிற ஸ்தலத்தைத் தவிர்ப்பது எப்படி" என்ற பின்வரும் இரண்டு சிறு நூல்களில் சுவாமி பவுல் ஓ சலைவன் O.P. அவர்கள், பல அழகிய, ஆறுதலளிக்கிற, ஏவுதல் தருகிற சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக, அவருக்காக ஒரு சிறு ஜெபம் செய்து ஒப்புக்கொடுக்கும்படியாகவும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த நேரத்திலும், விசேஷமாக, நம் அன்பிற்குரிய யாராவது சாகும் போதும், குடும்பத்தினரோடு, அல்லது நண்பர்களோடு இந்நூல்களின் ஒரு பிரதியைப் பகிர்ந்து கொள்வது, ஒரு பெரும் பிறர்சிநேகச் செயலாக இருக் கிறது. இதன் நன்மைகள் ஏற்கெனவே இந்த ஜீவியத் திலும், அதை விட அதிகமாக, ''அதியுந்நத மகிமையின் ஸ்தலத்திலும் '' உங்களிடம் திரும்பி வரும்.