மந்திரமாலைக்குப் பின் ஜெபம்

(அர்ச். பொனவெந்தூர் இயற்றியது)

(இந்த ஜெபத்தைப் பக்தியோடு முழந்தாளிட்டு ஜெபிப்பவர்கள் அனைவரும் மந்திரமாலை ஜெபிக்கும் போது கட்டிக் கொள்ளும் குற்றங்குறைகளை நிவிர்த்தி செய்யும் ஞானப் பலனைப் பெற்றுக் கொள்ள பாப்பரசர் பத்தாம் சிங்கராயர் சிறப்புச் சலுகை வழங்கியுள்ளார்.)

மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கும், சிலுவையில் அறையுண்ட நமதாண்டவராகிய சேசுகிறீஸ்து நாதருடைய மனுUகத்திற்கும், ஆசீர்வதிக்கப் பட்டவர்களும், மகிமை பொருந்தியவர்களுமாகிய கன்னி மரியாயின் மிகுந்த பலனுள்ள கன்னிமைக்கும், சகல அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்திற்கும் சகல சிருஷ்டிகளினாலேயும் ஸ்துதியும், தோத்திரமும், மகிமையும், புகழும் அநவரத காலமும் உண்டாகக் கடவது.  நமக்கோவென்றால், சதா காலமும் பாவ விமோசனம் உண்டாவதாக.  ஆமென்.

முதல்: நித்திய பிதாவின் திருச்சுதனைத் தாங்கிய கன்னி மரியாயின் திருவுதரம் பாக்கியம் பெற்றது.

பதில்: ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் பாலுண்ட கொங்கைகள் பாக்கியம் பெற்றன.  ஆமென்.

(இதன் பிறகு திருச்சபையின் பரிசுத்த பாப்பரசருடைய ஆத்தும சரீர நன்மைக்காக ஒரு பரலோக மந்திரமும், ஒரு அருள் நிறை மந்திரமும் ஜெபிக்கவும்.)