புனித மார்ட்டின், தன் மேலங்கியின் பாதியை ஓர் ஏழை பிச்சைக்காரருக்குத் தானமாக கொடுத்தார், ஆண்டவர் அவருக்கு தரிசனமாகி நன்றி சொன்ன போதுதான் தெரிந்தது. தான் தானமாகக் கொடுத்தது கிறிஸ்துவுக்கே என்று.
தோமினிக்கன் சபையைச் சார்ந்த முத்திப்பேறு பெற்ற ஜோர்டன், கடவுளின் பெயரால் தம்மிடம் உதவி கோரிய எவருக்கும் மறுப்புக் கோராமல் உதவுவார். ஒருநாள், படிக்கும் காலத்தில், தம்முடைய பணப்பையை எடுத்துச் செல்ல மறந்து விட்டார். அன்று ஒரு ஏழை மனிதர்
இவரிடம் கடவுளின் அன்பின் பொருட்டு உதவி கோரி, மறுப்புத் தெரிவிக்க இயலாத ஜோர்டன், தாம் பொக்கிஷமாகக் கருதியிருந்த விலையுயர்ந்த இடைக்கச்சையை தானமாக வழங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து, ஆலயத்திற்குச் சென்றபோது, பாடுபட்ட ஆண்டவர் சுரூபத்தின் இடுப்பில் அக்கச்சைசையைக் கண்டு வியந்தார். ஆம், இவரும் இயேசு கிறிஸ்துவுக்கே தானம் வழங்கியுள்ளார். நாம் ஒவ்வொருவருமே தானம் செய்யும் போது கிறிஸ்துவுக்கே அளிக்கின்றோம்.
எடுக்க வேண்டிய தீர்மானங்கள்.
(அ) நம்மால் முடிந்த அனைத்து வகையான தானங்களை செய்வோம்.
(ஆ) நம் வசதிக்குத் தக்கவாறு பலி பூசைகள் ஒப்புக் கொடுப்போம்.
(இ) நம்மால் இயன்ற அளவு பலி பூசைகளில் பங்கேற்போம்.
(ஈ) நம்முடைய அனைத்து வேதனைகளையும், துன்பங்களையும் உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீட்பிற்காக ஒப்புக் கொடுப்போம்.
இத்தகைய முயற்சிகளால் எண்ணற்ற ஆன்மாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டு, பத்தாயிரம் மடங்கு பலன்களைத் திரும்ப கைம்மாறாக பெறுவோம்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கான உதவிகள்!
Posted by
Christopher