சேசுநாதர் முள்முடி சூட்டப்படுகிறார்!

"அப்போது அதிபதியினுடைய சேவகர்கள் சேசுநாதரை அரண்மனை முற்றத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய், சேவகர் படையெல்லாம் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி, ஓர் சிவப்புச் சால்வையை அவர்மேல் போர்த்தினார்கள். முள்ளுகளால் ஓர் முடியையும் பின்னி, அவருடைய சிரசின்மேல் வைத்து, ஓர் மூங்கில் தடியையும் அவருடைய வலது கையில் கொடுத்தார்கள். பின்னும், அவர் முன்பாக முழங்கால் படியிட்டு: யூதருடைய இராஜாவே வாழ்கவென்று அவரைப் பரிகாசம் பண்ணி, அவர்மேல் துப்பி, அந்த மூங்கில் தடியையும் வாங்கி, அவரைச் சிரசில் அடித் தார்கள்'' (மத்.27:27-30).

அயல்நாடுகளை யுத்தத்தில் வென்ற உரோமையர்கள் மத்தியில் ஒரு கொடிய பழக்கம் இருந்து வந்தது. தோல்வி யுற்ற மன்னர்களைப் பின்கட்டாய்க் கட்டி, செங்கோ லுக்குப் பதிலாகக் கைகளில் ஒடிந்ததொரு நாணற்குச்சி யையும், முடிக்குப் பதிலாகச் சிரசில் பழங்காகிதத் தொப்பி யையும், இராஜரீக சால்வைக்குப் பதிலாகக் கிழிந்த கந்தல் துணிகளையும் அணிவிப்பார்கள். இவ்விதக் கேவலத்தோடு அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டு, வீதிகளில் இழுத்துச் செல்வார்கள். இந்தக் கேலி பரிகாசங்களைச் சகிக்க மனமில்லாதவர்களாய், அநேக மன்னர்களும் தளபதி ளும், தங்களுடைய படை தோல்வியுற்றது என அறிந்ததும் தங்கள் வாளைக் கொண்டு தங்களையே மாய்த்துக் கொள்வார்கள்.

இதோ அரசர்க்கு அரசராகிய நமது ஆண்டவர், இத்தகைய கேலி பரிகாசத்திலும் கொடியதொரு பரிகாசத்தை அனுபவிக்கிறார். பிலாத்துவின் போர்ச் சேவகர்கள் சற்றும் ஈவிரக்கமற்றவர்கள். யூத மக்களினத் தையும், அவர்களுடைய வேதத்தையும் துச்சமாய் எண்ணிய வர்கள். யூதர்களே தங்கள் சொந்த இனத்தவரும், தங்க ளுடைய வேத போதகருமான சேசுநாதரைக் கொடுமைப் படுத்திக் கொல்லத் தேடுவதைப் பார்த்து, மூர்க்க வெறி கொண்ட அந்தச் சேவகர்களுக்கு ஒரு பயங்கர யோசனை தோன்றுகிறது. மூன்று வருடங்களாக இஸ்ராயேல் மக்களின் மத்தியில் அளவற்ற மகிமையும், மதிப்பும் அடைந்திருந்த சேசுநாதர் தங்கள் கையில் சிக்கியிருப்பதையும், அவரும் தம்முடைய அற்புதப் புதுமைகளில் ஒன்றையும் செய்யாது,  சாந்தத்தோடு சகலத்திற்கும் உட்படுவதையும், அவரைப் பின்பற்றியவர்கள் ஓடி ஒளிந்ததையும் கண்டு, உலகம் கண்டறியாத புதிதான ஒரு வாதையை அவருக்குக் கொடுக்கக் கலந்தாலோசிக்கிறார்கள். இதோ யூதர்களின் இராஜாவாகப் பலரால் கருதப்பட்ட சேசுவுக்கு, ஏன் எவரும் கண்டு நடுங்கும் விதமான இராஜபங்கம் செய்யக்கூடாது? இந்த அக்கிரம யோசனை தோன்றியவுடனே, நமது அன்புள்ள ஆண்டவரை இழுத்துச் சென்று அவருடைய வஸ்திரங்களைக் கழற்றுகிறார்கள். அவரது கரங்கள் இரண்டையும் இறுகக் கட்டுகிறார்கள். நிற்கவும் முடியாத அளவுக்கு பலவீனமடைந்திருந்த சேசுவை ஓர் ஓட்டை நாற்காலியில் இருத்துகிறார்கள். ஓட்டை நாற்காலியே இந்த யூத மன்னரின் சிம்மாசனம் என்று நகைக்கிறார்கள். கட்டப்பட்ட கைகளில் ஒரு மூங்கிற்கோலைக் கொடுத்து, இதுவே இந்த அரசரின் செங்கோல் என்று சிரிக்கிறார்கள். இவருக்கு இராஜ இரத்தாம்பர ஆடை வேண்டுமே எனச் சொல்லி, ஒரு பழைய கிழிந்த சிவப்புச் சால்வையை அவர்மீது போர்த்துகிறார்கள். இக்கோலம் கொண்ட அரசருக்கு ஒரு முடி வேண்டுமே எனப் பரிகசித்து, காரை முட்களால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய சிரசின்மீது வைத்து அழுத்துகிறார்கள். இவருக்கு இராஜ மரியாதை செய்ய வேண்டாமோ எனக் கேலி செய்து, அவர் முன்னே வேடிக்கையால் முழங்காலிட்டு, யூதர்களின் இராஜாவே வாழ்க என்று கூவி, கனைத்து, அவர் கையில் வைக்கப்பட்ட மூங்கில் தடியைப் பிடுங்கித் தலையில் ஓங்கி அடிக் கிறார்கள். முகத்தில் காறித் துப்புகிறார்கள்.

இவருக்கு இராஜ இரத்தாம்பர ஆடை வேண்டுமே எனச் சொல்லி, ஒரு பழைய கிழிந்த சிவப்புச் சால்வையை அவர்மீது போர்த்துகிறார்கள். இக்கோலம் கொண்ட அரசருக்கு ஒரு முடி வேண்டுமே எனப் பரிகசித்து, காரை முட்களால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய சிரசின்மீது வைத்து அழுத்துகிறார்கள். இவருக்கு இராஜ மரியாதை செய்ய வேண்டாமோ எனக் கேலி செய்து, அவர் முன்னே வேடிக்கையால் முழங்காலிட்டு, யூதர்களின் இராஜாவே வாழ்க என்று கூவி, கனைத்து, அவர் கையில் வைக்கப்பட்ட மூங்கில் தடியைப் பிடுங்கித் தலையில் ஓங்கி அடிக் கிறார்கள். முகத்தில் காறித் துப்புகிறார்கள்.

ஆ, சகோதரனே! இன்னமும் மவுனமாய் வீற்றிருக்கும் உன் அன்பரைப் பார். சிரசின்மீது அடித்த அடிகளால் முட்கள் மூளையிலும் கண்களிலும் இறங்கி, அவருடைய திரு இரத்தம் மார்பிலும், கைகளிலும் வழிந்தோடுகின்றது. அந்நேரம் அவர் உன்னையும் என்னையும் நினைத்து அழுது வடித்த கண்ணீரோடு அந்த உதிரமும் கலந்து இறங்குவதைப் பார். ஆணவ அகங்காரத்தால் உன் தலை நிமிர்ந்து மற்றவர்களை நீ அலட்சியமாய் எண்ணியதற்காக, உன் இரட்சகர் தலைகுனிந்து பரிகாரம் செய்கிறார். பிறரைக் கெடுக்க நீ எடுக்கும் சூழ்ச்சிகளுக்கும், நினைக்கும் வஞ்சக எண்ணங்களுக்கும் பரிகாரமாக அவருடைய திருச்சிரசு முட்களால் ஊடுருவப்படுகின்றது. பாவ அந்தகாரம் உன் கண்களை மூடுகின்றது; பரம தயாளருடைய திருவிழிகள் அதற்குப் பரிகாரம் செய்கின்றன. கர்வத்தால் உன் தலை வெடிக்கின்றது; கர்த்தரின் திருச்சிரசு அதற்குப் பரிகாரம் செய்கின்றது.

இதோ இத்தனை கொடுமைப்படுத்தி உபாதிக்கும் இந்த மூர்க்கமுள்ள கயவர்களுக்கும் முதலாய் இவரே இரட்சகர்; இவரே அரசர்; இவரே ஆண்டவர்! இவ்வுண்மையை யூதர்களும் சேவகர்களும் அறியாதிருந்தது போல், இப்பொழுதும் எத்தனையோ வீணர்கள் அறியாதிருக் கின்றார்கள். இன்றைக்கும் இந்த இராஜாதி ராஜனைப் பரிகசிப்பவர்களும், பகடி பண்ணுகிறவர்களும், இவருக்கு முள்முடி சூட்டி, இவரது திருச்சிரசில் மூங்கில் தடியால் அடிப்பவர்களும் இல்லாமல் இல்லை. இவருடைய ஞானசரீரமாகிய திருச்சபை மானபங்கம் செய்யப்படுகிறது; தூ´க்கப்படுகிறது; உபாதிக்கப்படுகிறது. மக்களின் இருதயத்தில் இருந்து இந்த மனுமகனுடைய ஞாபகமே இல்லாது எடுத்து விட கங்கணம் கட்டி நிற்கும் நாஸ்திகரும் தேவ துரோகிகளும் அதிகரித்து வருகிறார்கள். என் சகோதரனே, மிருகத்தனமுள்ள இவர்களையும் நீ மனந் திருப்ப வேண்டுமானால், உன் அன்பரும் ஆண்டவருமான சேசு இரட்சகர் காட்டும் உத்தம வழியைப் பின்பற்றக் கடவாய். இருதயத்தின் தாழ்ச்சி, சாந்தம், பொறுமை, சுயநலமற்ற பரித்தியாகம், பிறர்நலம் கருதும் அன்பு இவைகளே முள்முடி தாங்கிய விண்முடி மன்னரான சேசுநாதர் நமக்குப் போதிக்கும் போதனை என்று அறியக் கடவாயாக.