நீர் மாசணுகாதவள்

ஓ மரியாயே, நீர் மாசற்றதனம் கெடாதவளாகவும் அசுத்தக் கேட்டிற்கு உட்படாதவளாகவும், பூரண கற்புள்ளவளாகவும் இருக்கிறீர். பரலோகத்தின் சோதிப் பிரகாசமுள்ள வாசலாக தேவரீர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறீர்.

ஓ கிறீஸ்து நாதருடைய நேசப் பிரியமுள்ள திருமாதாவே, பக்தியுள்ள எங்கள் ஸ்துதி புகழ்ச்சிகளைத் தேவரீர் ஏற்றுக் கொள்வீராக. எங்கள் இருதயங்களும், சரீரங்களும் பரிசுத்தமானவையாய் இருக்கத் தக்கதாக, உதரத்தில் அவதரித்தவர், 

பதில்: அல்லேலூயா.

முதல்: திருவுளம் பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார். 

பதில்: அல்லேலூயா.

முதல்: எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்.

பதில்: அல்லேலூயா.

முதல்: எப்பொழுதும் கன்னிகையான மரியாயே, அகமகிழ்ந்து பூரிக்கக் கடவீர்.

பதில்: அல்லேலூயா.

முதல்: அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தானமாயினார்.

பதில்: அல்லேலூயா. 

முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, அல்லேலூயா.

பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

(இதன் பின் சர்வேசுரா சுவாமி, சம்மனசு சொன்னதினாலே... என்ற ஜெபத்தைச் சொல்லவும்.)