சிறு வாசகம் (சர்வப் பிரசங்கி 24:15)

ஆனதால் சீயோனில் உறுதிப்படுத்தப் பட்டேன். பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாறினேன். எருசலேமில் என் அதிகாரம் சென்றது.

பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.

முதல்: அர்ச்சிஷ்ட மரியாயே, கிறீஸ்துவினுடைய மாதாவே! உம்மிடம் மன்றாடும் உமது எளிய ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டருளும்.

பதில்: அர்ச்சிஷ்ட மரியாயே, கிறீஸ்துவினுடைய மாதாவே! உம்மிடம் மன்றாடும் உமது எளிய ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டருளும்.

முதல்: அன்றியும் பரலோகத்திலிருந்து எங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தாரும்.

பதில்: உம்மிடம் மன்றாடும் உம் எளிய ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டருளும்.

முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும் ....

பதில்: அர்ச்சிஷ்ட மரியாயே, கிறீஸ்துவினுடைய மாதாவே! உம்மிடம் மன்றாடும் உமது எளிய ஊழியர்களின் ஜெபங்களைக் கேட்டருளும். 

முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக

பதில்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும். 

பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.


(சுத்திகரத் திருநாளிலிருந்து ஆகமன காலம் வரை கீழ்க்காணும் ஜெபத்தைச் சொல்லவும்:)

பிரார்த்திக்கக் கடவோம்

ஓ ஆண்டவராகிய சர்வேசுரா! உமது ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் சரீரத்திலும், உள்ளத்திலும் எப்போதும் நலமாயிருக்கும்படி உம்மை மன்றாடுகின்றோம்.  அன்றியும் எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயின் மகத்துவமுள்ள வேண்டுதலால் நாங்கள் இக்காலத் துயரத்தினின்று விடுவிக்கப் படவும், அதன்பின் வரும் நித்தியப் பேரின்ப மகிழ்ச்சியை அனுபவிக்கவும் எங்களுக்கு அருள்வீராக.  இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் சதாகாலமும் ஆட்சி புரியும் எங்கள் ஆண்டவரும், உமது திருச்சுதனுமாகிய சேசுக்கிறீஸ்து நாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.

பதில்: ஆமென்.

முதல்: ஆண்டவரே, என்  மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.

பதில்: சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.

முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே.

பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே.  உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

(ஆகமன காலத்தில்)

பிரார்த்திக்கக் கடவோம்

சர்வேசுரா, உமது வார்த்தையானவர் முத்திப்பேறு பெற்ற கன்னிமாமரியின் திருவுதரத்தில் மனுவுருவெடுக்கவும், அதனை ஒரு சம்மனசானவர் வழியாக அவர்களுக்கு அறிவிக்கவும் மகிழ்வுடன் திருவுளமானீரே.  அந்தப் பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாயாரென்பதை மெய்யாகவே விசுவசிக்கிற நாங்கள், அவர்களது பரிந்துரையினால் உமது உதவியைக் கண்டடையச் செய்யும்படியாக உம்மிடம் மன்றாடுகிற எங்களுக்கு எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக அனுக்கிரகம் செய்தருளும்.  ஆமென்.

(கிறீஸ்துமஸ் முதல் சுத்திகரத் திருநாள் வரையில்) 

பிரார்த்திக்கக் கடவோம்

ஓ சர்வேசுரா! முத்திப்பேறு பெற்ற கன்னிமரியாயின் பலனுள்ள கன்னிமையின் வழியாக மனுக்குலத்திற்கு நித்திய இரட்சணியத்தின் வெகுமதியை வழங்கியுள்ளீரே. அவர்கள் வழியாகவே ஜீவியத்தின் கர்த்தரை அடைந்து கொள்ள நாங்கள் தகுதி பெற்றோம்.  ஆதலால் தேவரீரை நோக்கி மன்றாடும் அடியோர்கள், அவ்வாறே அத்திரு மாதா எங்களுக்காகப் பரிந்து பேசுவதையும் உணருவோமாக.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக.  ஆமென்.