காட்சி 1 - கி.பி. 40 - அழகுத்தூண் அன்னை - ஸ்பெயின்.

அழகுத்தூண் அன்னை - சரகோசா, ஸ்பெயின் (கி.பி. 40)

 


வரலாறு

திருச்சபையின் மரபு வழி செய்திகளின் படி, திருச்சபையின் தொடக்க காலத்தில், ஜனவரி 2, கி.பி. 40 அன்று அப்போஸ்தலர் பெரிய யாகப்பர் எப்ரோ ஆற்றங்கரையில் இருந்த செசார்அகஸ்தா (Caesaraugusta), தற்போதைய சரகோசா நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கையில், அதிசயிக்கத்தக்க விதத்தில் கன்னி மாமரி அவரது முழு உடலோடு ஒரு தூண் மேல் நின்று கொண்டு ஜெருசலேம் நகருக்கு தன்னை அழைப்பதைக் கண்டார். வானதூதர்களால் சுமந்து வரப்பட்ட அந்த தூண்தான் தற்போது சரகோசா நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது. பல அதிசயங்கள் அங்கு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு

அர்ச். பெரிய யாகப்பர் செபதேயு மற்றும் சலோமி அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். நற்செய்தியாளர் அர்ச். அருளப்பரின் சகோதரர்.

கி.பி. 3௦

பெரிய யாகப்பரும் அவரது சகோதரர் அருளப்பரும் தங்களது தந்தை செபதேயுவுடன் கடற்கரை ஓரத்தில் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது, சேசு கிறிஸ்து அவர்களை தன்னை பின் செல்ல அழைத்தார். (மத். 4:21-22, மாற். 1: 19-20). மாற்கு நற்செய்தியின் படி பெரிய யாகப்பரும் அவரது சகோதரர் அருளப்பரும் இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் என அழைக்கப்பட்டனர்.( மாற். 3:7)

கி.பி. 33

சேசு கிறிஸ்துவின் இறப்பு. சிலுவை மரணத்திற்குப் பிறகு, சேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விண்ணேற்றம் அடைந்த பிறகு, அவரது சீடர்கள் நற்செய்தியை அவர் விட்ட இடத்திலிருந்து இஸ்ரேலில் அறிவிக்கத் தொடங்கினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு உரோமைப் பேரரசின் வாயிலாக உலகமெங்கும் அறிவித்தார்கள்.

கி.பி. 39

அர்ச். பெரிய யாகப்பர் மேற்கு நோக்கி பயணம் செய்து தொலைவில் இருந்த ஸ்பெயினின் வடகிழக்கில் இருந்த சரகோசா என்ற ஊருக்கு வந்து அங்கு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். ஆனால் அதில் முழுவதும் வெற்றி பெறமுடியவில்லை. அந்த இடமானது மிகவும் பழைமையான சல்டுபாவின் புனித இடமாகும் (சல்டுபா என்பது சரகோசாவின் முதலாவது பெயராகும்). பின்னர் இது உரோமைப் பேரரசால் வெற்றிகொள்ளப்பட்டு, பேரரசரின் பெயரால் செசார்அகஸ்தா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது பின்னர் அராபியர்களால் சரகுஸ்தா என்றழைக்கப்பட்டு பின்னர் சரகோசா என்று திரிந்தது.

ஜனவரி 2, கி.பி. 40

அர்ச். பெரிய யாகப்பர் எப்ரோ ஆற்றங்கரையில் இருந்த செசார்அகஸ்தா (தற்போதைய சரகோசா) நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார். அவரது இந்த நற்செய்திப்பயணம் தோல்வியின் விளிம்பில் இருந்த பொழுது, மிகவும் மனம் கலங்கி செபத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, கன்னி மாமரி நின்றுகொண்டிருந்த அஞ்ஞானிகளின் கல் ஒன்றின் மேல் நின்று கொண்டு அவருக்கு காட்சியளித்தார்கள். அவரை சந்திக்க தனது முழு உடலோடு வந்திருந்த கன்னி மாமரி (வரலாற்றின் அச்சமயத்தில், கன்னி மாமரி உயிருடன் இருந்தார்கள்) வானதூதர்கள் சுமந்து கொண்டிருந்த, ஆறு அடி உயரமுள்ள ஜாஸ்பெர் கல்லினாலான(சிவப்பு மஞ்சள் நிறம்) தூணோன்றின் மீது நின்றவாறே அவருக்கு தோன்றினார்கள். அந்த தூணையும், பாலன் சேசுவை தாங்கிய தனது சுரூபத்தையும் புனிதரிடம் கொடுத்து,”-இந்த இடம் எனது வீடு, இந்த உருவமும் தூணும், நீ கட்டப் போகும் ஆலயத்தின் பெயரும் பீடமுமாக இருக்க வேண்டும்....இந்த நாட்டின் மக்கள் எனது மகன் சேசுவை மிகவும் மகிமைப்படுத்துவார்கள்” என்று கூறினார்கள்.

கி.பி. 40

அதன் பின்னர் அர்ச். பெரிய யாகப்பர், அவ்விடத்தில் அன்னை மாமரியின் பெயரால் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அந்த ஆலயம் தான் உலகிலேயே முதன் முதலாக பரிசுத்த கன்னி மாமரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். திருச்சபையின் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் அந்த ஜாஸ்பெர் தூண் மற்றும் மரத்தாலான சுரூபத்தை இன்றும் காணலாம். மிகக் குறுகிய காலத்திற்குள், அந்த சிற்றாலயமானது அஞ்ஞானிகள் மனமாற்றம் அடையும் முக்கிய இடமாக உருமாறியது. கன்னி மாமரியின் காட்சி மற்றும் கிறிஸ்துவத்தின் மாபெரும் வளர்ச்சியின் காரணமாக, மிக விரைவாக சரகோசா ஊர் மிகப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார இடமாக உருவாகியது. அந்த மிக எளிமையான சிற்றாலயமானது அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு, உருவத்திலும் வளர்ந்து கொண்டே தற்போதைய பேராலயமாக 17-ம் நூற்றாண்டு வாக்கில் கட்டி முடிக்கப்பட்டது.

அர்ச். பெரிய யாகப்பர் ஜெருசலேம் திரும்பியது.

கி.பி. 44

அர்ச். பெரிய யாகப்பர் ஏரோது அரசன் முதலாம் அகிரிப்பாவால் தலை வெட்டப்பட்டு வேதசாட்சியாக மரித்தார்.(அப் பணி 12:1-2)(கிறிஸ்துவின் மேல் கொண்ட விசுவாசத்திற்காக மறைசட்சியாக மரித்த முதல் அப்போஸ்தலர்). மேலும் தொடக்க கால திருச்சபையின் பாரம்பரியத்தின் படி, அவரது மரணம் வரை அவர் ஜெருசலேம் விட்டு வேறு ஏங்கும் செல்லவில்லை.(see Clement of Alexandria, Stromateis, VI; Apollonius, quoted by Eusebius, Hist. Eccl. VI.xviii).

கி.பி. 44

அவரது சீடர்களில் பலர் அவரது உடலை எடுத்துக்கொண்டு இறுதிச் சடங்குகளுக்காக ஸ்பெயின் திரும்பினர். அந்த இடத்தின் அரசி, அர்ச். பெரிய யாகப்பரின் சீடர்கள் நிகழ்த்திய பல அற்புதங்களைக் கண்டு, கிருஸ்துவத்திற்கு மனம் மாறி அவரது உடலை அங்குள்ள ஒரு வயலில் புதைக்க அனுமதி அளித்தார்.

கி.பி. 800

எட்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னர், அவரது கல்லறை ஒரு உள்ளூர் துறவி ஒருவரால் திரும்பக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவ்விடத்தில் அர்ச். பெரிய யாகப்பரின் நினைவாக பேராலயம் ஓன்று எழுப்பப்பட்டது. அவரது கல்லறை, அந்த உள்ளூர் துறவியால் வழக்கத்துக்கு மாறான விண்மீன் ஓன்று தோன்றியதன் மூலம் கண்டறியப்பட்டது. பேராலயம் நிறுவப்பட்ட கொம்பஸ்தலா(starry field) என்றழைக்கப்படும் அந்த இடம் ஸ்பெயினின் கலிசியா மாகாணத்தில் உள்ளது. இன்று வரை கத்தோலிக்கர்களின் மிக முக்கியமான திருயாத்திரை தலமாக விளங்குகின்றது.

கி.பி. 1118

சரகோசாவை மீண்டும் வெற்றி கொண்டபின்னர், உரோமையரின் கலைநுட்பத்துடன் கூடிய ஆலயம் கட்ட ஆணையிடப்பட்டது.

கி.பி. 1434

இந்த ஆலயமானது தீயினால் சேதமடைந்தது, அதன் பின்னர் இடைநிலைக்கால கூர்மாட சிற்பப் பாணியில் கட்டப்பட்டது.

ஜூன் 23,1635

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சம்போங்கா (Zamboanga) நகரில், வண. மெல்சோர் தே வேரா என்ற சேசு சபையினைச் சேர்ந்த குருவானவரால் கடற்கொள்ளையர்கள் மற்று அடிமை வணிகர்களுக்கு எதிராக ஃபோர்ட் பிளார் (Fort Pilar) என்ற கோட்டை அமைக்கப்பட்டது. மிகவும் பழைமையான இஸ்பானிய நகரங்களில் பூக்களின் நகரம் என்றழைக்கப்பட்ட இதுவும் ஒன்று. அதனுடைய பாதுகாவலி நமது அழகுத்தூண் அன்னை (Our Lady of the Pillar or Nuestra Senora del Pilar). இதன் வாயிலாக இஸ்பானிய மொழியில் தூணுக்கான பெண்மையின் பெயரான பிளார் என்ற பெயர் ஏற்பட்டது.

கி.பி. 1681

ஐரோப்பிய சிற்ப பாணியில் கட்டப்பட்ட பேராலயம். அழகுத்தூண் அன்னையின் பிரதான தேவாலயமானது 1681-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் நிறைவுபெற்றது. இந்த பேராலயமானது சரகோசா நகரில் காணப்படும் இரு சிறிய பேராலயங்களில் ஒன்றாகும். மேலும் அருகில் உள்ள நகரின் லா சியோ தேவாலத்தின் துணைக்கோவிலாகும்.

கி.பி 1725

சரகோசா நகராட்சி சிற்றாலயத்தின் கட்டுமான திட்ட அடிப்படையில் மாற்றம் செய்ய விரும்பி வெஞ்சுரா ரோட்ரிகஸ் (Ventura Rodríguez) என்ற கட்டுமான நிபுணரை பணியில் அமர்த்தியது. அவர் ஆலயத்தை தற்போதைய அளவுகளில், 130 மீட்டர் நீளமும் 67 மீட்டர் அகலமும், நான்கு கோபுரங்களும், பதினொன்று அழகு மாடங்களுடன் கட்டி முடித்தார்.

சரகோசாவின் அழகுத்தூண் அன்னை! அன்னையின் சுருக்கமான வரலாறு!

அர்ச். பெரிய யாகப்பர் எப்ரோ ஆற்றங்கரையில் இருந்த செசார்அகஸ்தா (தற்போதைய சரகோசா) நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார். அவரது இந்த நற்செய்திப்பயணம் தோல்வியின் விளிம்பில் இருந்த பொழுது, மிகவும் மனம் கலங்கி செபத்தில் ஈடுபட்டார். அப்பொழுது, கன்னி மாமரி நின்றுகொண்டிருந்த அஞ்ஞானிகளின் கல் ஒன்றின் மேல் நின்று கொண்டு அவருக்கு காட்சியளித்தார்கள். அவரை சந்திக்க தனது முழு உடலோடு வந்திருந்த கன்னி மாமரி (வரலாற்றின் அச்சமயத்தில், கன்னி மாமரி உயிருடன் இருந்தார்கள்) வானதூதர்கள் சுமந்து கொண்டிருந்த, ஆறு அடி உயரமுள்ள ஜாஸ்பெர் கல்லினாலான(சிவப்பு மஞ்சள் நிறம்) தூணோன்றின் மீது நின்றவாறே அவருக்கு தோன்றினார்கள். அந்த தூணையும், பாலன் சேசுவை தாங்கிய தனது சுரூபத்தையும் புனிதரிடம் கொடுத்தார்கள்.

செய்திகள் 

“இந்த இடம் எனது வீடு, இந்த உருவமும் தூணும், நீ கட்டப் போகும் ஆலயத்தின் பெயரும் பீடமுமாக இருக்க வேண்டும்....இந்த நாட்டின் மக்கள் எனது மகன் சேசுவை மிகவும் மகிமைப்படுத்துவார்கள்”.

அற்புதங்கள், சுகமளிப்பு மற்றும் அடையாளங்கள்

அர்ச். பெரிய யாகப்பர் கட்டிய முதல் சிற்றாலயமானது பின்னர் அழிக்கப்பட்டது ஆனால் அதே இடத்தில் மீண்டும் சிற்றாலயம் கட்டப்பட்டது. சுரூபமும் தூணும் கடந்த 2000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. அன்னையின் உதவியை வேண்டி இந்த திருத்தலத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பேர் சுகம் பெறுவது காலம் காலமாக நடக்கிறது.

ஒருநாள், மைக்கிள் யுவான் பெல்லிசெர் டி காலண்டரா (Miguel Juan Pellicer di Calandra) எனும் பெயருள்ள இளைஞன் மிகவும் மோசமான விபத்தில் சிக்கினான். அவனது முழங்காலுக்குக் கீழ் வெட்டி எடுக்கப் படவேண்டி வந்தது. அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறினான். ஆனால் அதன் பின்னர் அவனால் வேலைக்குச் செல்ல இயலாததால், பிச்சைக்காரனாக மாறினான்...

ஒவ்வொரு நாளும் தனது வீட்டிற்கு வந்த பின்னர் திருத்தலத்தில் உள்ள விளக்குகளில் இருக்கும் என்னை எடுந்து வந்து கால்களில் தழும்புகளில் தடவுவான். கால்களை இழந்து இரண்டு வருடம் ஐந்து மாதங்கள் கழித்து, வழக்கம்போல அழகுத்தூண் அன்னையிடம் செபித்த பின்னர் உறங்கப்போனான். அடுத்த நாள் காலையில் அவன் தனது இரு கால்களுடன் எழுந்தான்!!!!

இந்த புதுமையின் செய்தி பரவியவுடன், அதனை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாவல்

அழகுத்தூண் அன்னை ஸ்பெயின் தேசத்திற்கு கன்னி பாதுகாவலியாகவும் அந்நாட்டின் ஊர்க்காவல் படையினரின் பாதுகாவளியாகவும் இருக்கின்றார்கள்.. பிலிப்பைன்சின் சம்போங்கா நகரில் அழகுத்தூண் கன்னி மாமரி ஐந்து நூற்றாண்டுகளாக வணங்கப்பட்டு வருகின்றார்கள். அவரது சுரூபமானது 16-ம் நூற்றாண்டின் ஸ்பெயினின் ராணுவக் கோட்டையான எல் புயர்ஸா ரியல் தே நுயஸ்ற்ற செனோரா விர்ஜென் டெல் பிளார் தே சரகோசா (El Fuerza Real de Nuestra Señora Virgen del Pilar de Zaragoza) முகப்பின் உச்சியில் நிறுவப்பட்டுள்ளது. அந்த ராணுவக் கோட்டையானது தற்போது அன்னை மாமரியின் கத்தோலிக்கத் திருத்தலமாகும்.

அழகுத்தூண் அன்னையின் பெருவிழா அக்டோபர் 12. ஒவ்வொரு இலத்தின்-அமெரிக்க நாடும், சிற்றாலத்தினுள் ஜாஸ்பெர் தூணின் மேல் வைக்கப்பட்டுள்ள பதினைந்தாம் நூற்றாண்டு மரத்தினாலான அன்னையின் சுரூபத்திற்கு தங்களது தேசியத்திற்கான மாந்தையினை (மேலாடை) நன்கொடையாக அளித்துள்ளன. பெருவிழாவின் பொழுது சுருபமானது நகரினைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்படுகிறது. இந்த திருத்தலமானது கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவர் அல்லாதோருக்கும் திருயாத்திரை செல்லும் இடமாக திகழ்கிறது.

திருச்சபையின் ஒப்புதல்

அழகுத்தூண் அன்னையின் காட்சிகள் திருச்சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆலயத்தினை பேராலயமாக மாற்றுவதற்காக மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

The First Marian Apparition in Church History: Our Lady of the Pillar!

October 12th, in addition to being Columbus Day, is also the feast day of Our Lady of the Pillar, patroness of all Hispanic peoples. While not one of the most widely known titles of Our Lady, it is the oldest, and has a most fascinating story that you will be delighted to read.

Tradition has it that the Blessed Virgin Mary, sometime before  her bodily Assumption into heaven, appeared to the Apostle St. James the Elder while he was living and preaching in Spain.

The Story of Our Lady of the Pillar

After Pentecost, the 12 Apostles dispersed to preach the Gospel all over the world. St. James the Greater, on one of his apostolic journeys, preached in the Iberian Peninsula in modern-day Spain.

St. James was discouraged that the pagans of that land were not responding to the Gospel and converting to Christianity. He had only a handful of converts to show for his labors. In the face of what he thought was failure in his mission, he prayed with his disciples by the Ebro river in modern day Zaragoza.

To bring him consolation, while she was still alive and living in Jerusalem, Our Lady appeared to him and his disciples atop a pillar of jasper stone carried by angels, while holding a smaller wooden statue of herself holding the Christ Child. The date was October 12 in the year 40 AD.

According to one account, Our Lady had previously promised St. James that she would come to his aid when he needed it the most. In fact, it was she who sent James into that region of the Roman Empire to tell the people of Hispania about her Son, Jesus. And then, in his most desolate hour, when he was considering leaving his mission field, she comes to his rescue.

The Mother of God told St. James not to worry, that the people to whom he preached would not only be converted, but they would one day have faith as strong as the pillar on which she stood.

She gave the pillar and the statue to St. James and asked that a church be built on the spot in her honor, using the two items for the altar.

“This place is to be my house, and this image and column shall be the title and altar of the temple that you shall build… and the people of this land will honor greatly my Son Jesus.”

After asking for her church to be built, she gave another promise that,

“It will stand from that moment until the end of time in order that God may work miracles and wonders through my intercession for all those who place themselves under my patronage.”

St. James built a small chapel as Our Lady requested, by the Ebro river in Zaragoza, Spain, the first known Marian shrine in history. It became known as Our Lady of the Pillar, or Nuestra Senora del Pilar.  The chapel was replaced by larger churches over the centuries, the present stunning basilica being erected in the 17th century.

The statue and pillar have been preserved in the basilica just as they were given to St. James almost 2000 years ago (see below photo). Amazing! The pillar is now covered in an embossed metal covering, but behind the altar a portion of the pillar is exposed for veneration. Click the image below to view a pilgrim’s visit to this Marian shrine.

In the same vision Our Lady also recalled St. James to Jerusalem, where he met his martyrdom in 44 AD. His remains were taken by his followers back to Compostela, Spain, where a chapel was built in his honor. The chapel was later replaced by the famous Santiago de Compostela Cathedral, the most visited Catholic pilgrimage destination outside of Rome and the Holy Land.

Connection to Columbus Day

Christopher Columbus, the Italian Catholic explorer, sailed the Atlantic under the banner of the Catholic King and Queen of Spain on his three ships, the Nina (“Little Girl”), the Pinta (“Painted One”), and the Santa Maria (“Holy Mary”), which in hindsight can be seen as a foreshadowing of Our Lady of Guadalupe.

Interestingly, the flagship of Christopher Columbus, the Santa Maria, had a full name of Santa Maria de la Inmaculada Concepcion (Holy Mary of the Immaculate Conception). The U.S. bishops declared Mary under her title of the Immaculate Conception as the patroness of America in 1846.

After going a long time without seeing land, Columbus promised his anxious crewman that if they did not have landfall in their sight by the October 12th feast of Our Lady of the Pillar, so dear to the Spanish people, they would turn course and sail back to Spain.

On October 12th they sighted land, and claimed the New World first for Jesus Christ, and next for the Spanish crown. Read The Catholic Venture of Christopher Columbus. Yes, America belongs to Our Lady!

Our Lady of the Pillar Fast Facts

Our Lay of the Pillar is the first known apparition of the Blessed Virgin Mary.

It is also the only known apparition of Our Lady prior to her Assumption into heaven.

The Basilica of Our Lady of the Pillar in Zaragosa, Spain, is the first church dedicated to the Virgin Mary.

Our Lady of the Pillar is the patroness of Spain and all Hispanic People.

The first known apparition of Our Lady, and her first church, were entrusted to the Spanish people.

The church has remained in the same location after fires, wars, and disasters over the centuries. Three bombs were dropped on the basilica during the Spanish Civil War of 1936-1939; miraculously, none of them exploded.

A nine-day festival, Fiestas del Pilar, is celebrated in Zaragoza every year in her honor. It is a national holiday in Spain that coincides with the commemoration of the arrival of Christopher Columbus in the Americas in 1492, i.e. Columbus Day.

Christopher Columbus found and claimed the New World for Spain on October 12, 1492, the feast of Our Lady of the Pillar.