புனித பாத்ரே பியோ

54. ஒரு புனிதனாவது கடினமான காரியம். கடினமானது, ஆனால் இயலாத காரியமல்ல.

55. சிலுவையின் அடியில் ஒருவன் நேசிக்கக் கற்றுக்கொள்கிறான்.

56. ஜெபமாலையே ஆயுதமாக இருக்கிறது.

57. உன் வாழ்வு முழுவதும் சுய அர்ப்பணத்திலும், ஜெபத்திலும், வேலையிலும், தாழ்ச்சி யிலும், நம் நல்ல சர்வேசுரனுக்கு நன்றி செலுத்துவதிலும் செலவிடப்படுவதாக.

58. திவ்ய இராக்கினியை நேசித்து ஜெபமாலை சொல், ஏனெனில் அவர்களுடைய ஜெபமாலை இன்றைய உலகின் தீமைகளுக்கு எதிரான ஆயுதமாக இருக்கிறது.

59. நாம் நிந்தை அவமானங்களுக்கு உள்ளாகும்போது, ஆண்டவரை வாழ்த்திப் போற்ற கடுமையாக முயற்சி செய்வோம். நம் ஆன்ம துன்ப சோதனைகளிலும், நம் இருதயங் களை நொறுக்கும் துன்ப துயரங்களிலும் அவரை வாழ்த்துவோமாக, ஏனெனில் இதெல்லாம் கடவுளால் மிகுந்த ஞானத்தோடு நியமம் செய்யப்படுகிறது.

60. நாம் நம் ஜெபங்களைக் கொண்டு உத்தரிக்கிற ஸ்தலத்தை வெறுமையாக்க வேண்டும்.

61. ஒவ்வொரு நாளும், குறிப்பாக உன் இருதயம் வாழ்வின் தனிமையை உணரும்போது, ஜெபி.

62. ஜெபமில்லாமல் போரில் வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொண்டிரு.

63. ஜெபி, நம்பு, கவலையின்றி இரு. கவலை பயனற்றது. கடவுள் இரக்கமுள்ளவர், அவர் உன் ஜெபங்களைக் கேட்பார்.

64. திவ்ய இராக்கினி எப்போதும் தேவ நற்கருணைப் பேழையின் அருகில் இருப்பதை நீ காணவில்லையா?

65. அச்சமும் அவரைப் பற்றிக் கொள்கிறது, அவருடைய ஆன்மா மரணமட்டும் துக்கமா யிருக்கிறது.

66. இருளிலும், பரித்தியாகத்திலும், அதீதமான முயற்சியோடும் செய்யப்படும் செயலே அனைத்திலும் அதிக அழகான விசுவாசச் செயலாகும்.

67. ஆண்டவர் சுட்டிக் காட்டி அழைக்கிறார், ஆனால் நாம் காணவோ, பதிலளிக்கவோ விரும்புவதில்லை, ஏனெனில் நம் சொந்த விருப்பங்களையே நாம் தேர்ந்துகொள் கிறோம்.

68. கிறீஸ்தவனின் வாழ்வு சுயத்திற்கு எதிரான ஒரு நிரந்தரமான போராட்டமேயன்றி வேறெதுவுமில்லை; வேதனையை விலையாகத் தராமல், ஆன்மா தன்னுடைய உத்தம தனத்தின் அழகில் மலர்வதில்லை.

69. ஜெபமே நாம் கொண்டுள்ள அனைத்திலும் சிறந்த ஆயுதமாகும், அதுவே கடவுளின் திரு இருதயத்திற்கான திறவுகோலாக இருக்கிறது. நீ உன் உதடுகளைக் கொண்டு மட்டுமல்ல மாறாக, உன் இருதயத்தைக் கொண்டு இயேசுவோடு பேச வேண்டும். உண்மையில், சில சந்தர்ப்பங்களில் நீ உன் இருதயத்தைக் கொண்டு மட்டுமே அவரோடு பேச வேண்டும்.

70. மகிழ்ச்சி, சமாதானத்தோடு, பிறர்சிநேகத்தின் சகோதரியாக இருக்கிறது. சிரித்தபடி ஆண்டவருக்கு ஊழியம் செய்.

71. ஆண்டவரே, என் கடந்த காலம் உம் இரக்கத்திற்கும், என் நிகழ்காலம் உம் அன்பிற்கும், என் எதிர்காலம் உம் பராமரிப்புக்கும் உரியதாக இருக்கிறது.

72. தைரியமாயிரு, பசாசின் தாக்குதல்களுக்கு அஞ்சாதே. இதை என்றென்றும் நினைவில் வை, உன் மனச்சான்றுக்கு எதிராக பசாசு ஊளையிடுகிறது, கர்ஜிக்கிறது என்றால், இது ஓர் ஆரோக்கியமான அடையாளம், ஏனெனில் அவன் உன் சித்தத்திற்குள் இல்லை என்பதை இது காட்டுகிறது.

73. கடவுளுக்குக் காலக் கெடு கொடுக்க உன்னால் இயலாது.

74. குழந்தை இயேசு உன் இன்றைய வாழ்வாகிய பாலைவனத்தின் வழியாக உன்னை வழிநடத்தும் விண்மீனாக இருப்பாராக.

75. ஜெபம் ஆன்மாவின் பிராணவாயுவாக இருக்கிறது.

76. நம் ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், உன்னைக் கனிவன்போடு நேசிக்கிறார், தம்முடைய அன்பின் இனிமையை உணர அவர் உன்னை அனுமதிக்கவில்லை என்றால், அது உன்னை அதிகத் தாழ்ச்சியுள்ளவனாகவும், உன் கண்களில் அதிகம் இழிந்தவனாகவும் ஆக்குவதற்காக மட்டுமே.

77. எளிமையையும், தாழ்ச்சியையும் நேசித்து, கடைப்பிடி, உலகம் என்ன நினைக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாதே, ஏனெனில் நமக்கு எதிராகப் பேச இந்த உலகத்திடம் எதுவும் இல்லை என்றால், நாம் கடவுளின் நிஜமான ஊழியர்களாக இருக்க மாட்டோம்.

78. எங்கே கீழ்ப்படிதல் இல்லையோ, அங்கே புண்ணியமில்லை, எங்கே புண்ணிய மில்லையோ, அங்கே எந்த நன்மையும் இல்லை, எங்கே எந்த நன்மையும் இல்லையோ, அங்கே அன்பு இல்லை, எங்கே அன்பு இல்லையோ, அங்கே கடவுள் இல்லை, எங்கே கடவுள் இல்லையோ, அங்கே மோட்சம் இல்லை.

79. வாழ்வு ஒரு கல்வாரியாகும்; ஆனால் நாம் அதில் சந்தோஷ உற்சாகத்தோடு ஏறிச் செல்ல வேண்டும். சிலுவைகள் மணவாளரின் ஆபரணங்களாகும், நான் அவற்றைக் கண்டு பொறாமை கொள்கிறேன். என் துன்பங்கள் இன்பமானவையாக இருக்கின்றன. நான் துன்புற முடியாமல் இருக்கும்போது மட்டுமே துன்பப்படுகிறேன்.

80. கிறீஸ்தவர்களின் கடவுள் முழுமையான உருமாற்றத்தின் கடவுளாயிருக்கிறார்; நீ அவருடைய அந்தரங்கத்தினுள் உன் துன்பங்களை வீசியயறியும்போது, அங்கிருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்கிறார், நீ அவநம்பிக்கையில் வீசும்போது, நம்பிக்கை மேல்மட்டத்திற்கு வருவதை நீ காண்கிறாய்.

81. இயேசுவின் பிரசன்னத்தை நீ உணராத போதும் அவர் உன்னோடு இருக்கிறார். உன் ஆன்ம போராட்டங்களின்போது அவர் உன் அருகில் இருப்பதை விட உனக்கு அதிக நெருக்கமாக வேறு ஒருபோதும் இருப்பதில்லை.

82. நம்முடைய அதிமிக நன்மைக்குரியதாக இல்லாத எதுவும் நமக்கு நிகழ கடவுள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாம் யார் என்று அவர் அறிந்திருக்கிறார். கஷ்டங் களின்போது, அவர் தமது தந்தைக்குரிய கரத்தை நம்மை நோக்கி நீட்டுகிறார். ஆனால் இந்த வரப்பிரசாதத்தை அனுபவித்து மகிழ்வதற்கு, நாம் நம் நம்பிக்கையை அவரில் முழுமையாக வைக்க வேண்டும்.

83. உன் எல்லாக் கவலைகளையும் கடவுளில் வைத்து விடு!

84. மிகுந்த அமைதியில் வாழு, இயேசு எப்போதும் உனக்கு ஒத்தாசையாயிருப்பார்.

85. எவ்வளவு அதிகமாகத் துன்பப்படுகிறாயோ, அவ்வளவு அதிகமாக அக்களிப்புக் கொள்ள வேண்டியவனாக நீ இருக்கிறாய், ஏனெனில், துன்ப நெருப்பில் ஆன்மா பசும் பொன்னாக மாறி, பரலோக அரண்மனையில் வைக்கப்படவும், ஒளிவீசவும் தகுதி யுள்ளதாகிறது.

86. நம் ஆன்மாவைப் பாவத்தால் நாம் உருக்குலைத்த பிறகும் கூட, அதை அழகாக்கத் தேவையான எல்லா வழிகளையும் கடவுள் உண்மையாகவே நம் கரங்களில் வைத்திருக்கிறார்.

87. சோதிக்கப்படுவது ஆன்மா ஆண்டவருக்கு மிகப் பிரியமானதாக இருக்கிறது என்பதன் அடையாளமாகும்.

88. நம் ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், கனிவோடு நேசிக்கிறார்; தம்முடைய அன்பின் இந்த இனிமையை உணர அவர் உன்னை அனுமதிப்பதில்லை என்றால், அது உன் சொந்தக் கண்களில் உன்னை அதிகத் தாழ்ச்சியுள்ளவனாகவும், இழிந்தவனாகவும் ஆக்கும்படியாகவே.

89. தேவ வரப்பிரசாதத்தின் வழியாக நாம் ஒரு புது வருடத்தின் தொடக்கத்தில் இருக் கிறோம். அதன் முடிவை அடைவோமா என்பதைக் கடவுள் ஒருவரே அறிவார். ஆகவே, நல்ல தீர்மானங்களுடன் எதிர்காலத்திற்கான தயாரிப்பில் நாம் அதைச் செலவிட வேண்டும்.

90. கடவுள் ஆன்மாவிடமிருந்து எல்லாவற்றையும் உரிந்துவிடும்போது, அவர் அதைச் செழுமையுள்ளதாக்குகிறார்.

91. சோதனையின் வழியாகவே கடவள் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஆன்மாக் களைத் தம்மோடு சேர்த்துக் கட்டுகிறார்.