புனித ஜோஸ் மரியா எஸ்க்ரீவா

226. உன்னை நோகச் செய்பவர்களை எப்போதும் மன்னிப்பதற்கு, தேவைப்பட்டால் தொடக்கத்திலிருந்தே உன்னை பலவந்தப்படுத்து, ஏனெனில் நீ அவர்களிடமிருந்து அனுபவிக்கக் கூடிய மிகப் பெரிய காயம் அல்லது குற்றம், கடவுள் உனக்கு மன்னித் துள்ள காரியத்தோடு ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை.

227. கடவுள் உனக்குச் சுமையைத் தருகிறார் என்றால், அவரே உனக்கு பலமும் தருவார்.

228. அதைரியப்படுதல் உன் அப்போஸ்தலப் பணியில் நுழைய அனுமதிக்காதே. கிறீஸ்து சிலுவையின் மீது தோற்றுப்போகாதது போலவே, நீயும் தோற்றுப் போய்விடவில்லை. தைரியம் கொள்!

229. மனந்திரும்புதல் என்பது ஒரு கண நேர வேலை; அர்ச்சிப்பு என்பது ஒரு வாழ்நாள் வேலை.

230. ஒருவன் தன் வேலையை அர்ச்சிப்பது என்பது வெறும் கற்பனைக் கனவு அல்ல, மாறாக, அது ஒவ்வொரு கிறீஸ்தவனிடமும்--உன்னிடமும் என்னிடமும்-- ஒப்படைக்கப்பட்டிருக்கிற வேலையாகும்.

231. பரிசுத்த ஜெபமாலையை ஜெபி. உன் பாவங்களின் மாற்றமில்லாத தன்மையைச் சுத்திகரிக்கும் அருள்நிறை மந்திரத்தின் ஏற்ற இறக்கமற்ற உச்சரிப்பு வாழ்த்தப் பெறுவதாக!