205. மற்றவர்களை விட அதிக நெருக்கமாக இயேசுவோடு நடந்தவர்கள்தான், மற்ற அனைத்திலும் அதிகப் பெரிதான துன்ப சோதனைகளைத் தாங்க வேண்டியவர்களாக இருந்தார்கள்.
206. படைக்கப்பட்ட எல்லா வஸ்துக்களிலும் கடவுளின் பராமரிப்பையும், அவருடைய ஞானத்தையும் பகுத்துணருங்கள், எல்லாக் காரியங்களிலும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
207. நம் எண்ணங்கள் நம்மைக் கலங்கச் செய்வதை அல்லது நம்மைக் கவலை கொள்ளச் செய்வதை அனுமதிப்பது நல்லதல்ல.
208. ஒரு பலவீனமான கற்பனை, மனித சுபாவம் மற்றும் தீய ஆவியால் விளைவிக்கப்படும் பிரச்சினைகளுக்கு ஆன்மாவைக் குற்றம் சாட்டுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
209. நீ மிகச் சரியாக எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருக்கும்படியாக, கடவுளில் நம்பிக்கை கொள்வாயாக.
210. நாம் கடவுளை நினைப்பதும், நம்மை மறப்பதுமே அனைத்திலும் அதிக அத்தியாவசியமானதும், கடவுளுக்குப் பிரியமானதுமான காரியமாகும்.
211. கிறீஸ்துநாதர் நம் சித்தத்தைக் கட்டாயப்படுத்துவதில்லை; நாம் அவருக்குத் தருவதை மட்டும் அவர் எடுத்துக்கொள்கிறார். ஆனால், நாம் நம்மையே முழுமையாக அவருக்கு விட்டுக் கொடுக்கிறோம் என்பதை அவர் காணும் வரையிலும், அவர் தம்மை நமக்கு முழுமையாகத் தருவதில்லை.
212. ஒழுங்காக ஜெபிக்கும் ஒரு மனிதன் கனமான பாவத்தில் நிலைத்திருப்பது சாத்திய மில்லை; ஏனெனில் இந்த இரண்டும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க முடியாது, ஒருவன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைக் கைவிட வேண்டியிருக்கும்.
213. வேறு எந்த நோக்கத்திற்காகவும் அன்றி, துன்புறுவதற்காக மட்டுமே உலகத்திற்கு வந்தவர் வாழ்த்தப் பெறுவாராக.
214. நீ என்ன செய்தாலும், அதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடு, அது அவருக்கு சங்கை மகிமையாக இருக்க வேண்டுமென்று ஜெபி.
215. ஜெபமாகிய பலமான தூண்மீது நான் சாய்ந்திருக்காததன் காரணமாக, கடவுள் மட்டில் நான் கொண்டுள்ள கடமையில் எவ்வளவு அடிக்கடி தவறியிருக்கிறேன்!
216. யாக்கோபு தம்முடைய மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்ததன் காரணமாக, ஒரு புனிதனாயிருப்பதை நிறுத்தி விடவில்லை.
217. நாங்கள் எங்கள் செயல்களுக்கு ஏற்ற வெகுமதியைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதால், நான் வெறும் கரங்களோடு உமது திருமுன் வராதிருப்பேனாக.