தன்னையே தந்தவரே உள்ளங்கள் எடுத்து வந்தோம் ***

தன்னையே தந்தவரே உள்ளங்கள் எடுத்து வந்தோம்
உம்மாலே தான் உயிர் வாழ்கிறோம்
உம் பாதம் சரணாகிறோம்
எம் ஆயுட்காலங்கள் உம் அன்புக்கோலங்கள்
எல்லாம் உமக்காக

1. ஆகாயம் தருகின்ற துளிகளாக
எண்ணற்ற நன்மைகள் எமக்குத் தந்தாய்
உடன் உயிர் உழைப்பையும் திறமைகள் பொருளையும்
உமக்கென மகிழ்ந்து கொண்டு வந்தோம்
வளம் கூட்டுவாய் வாழ்வாகுவாய்
உம் நிழலில் உயிர் வாழவே

2. மண்ணிலே வாழும் மனிதரிடம்
கதிரவன் பேதங்கள் காண்பதில்லை
கதிரவன் போல் உந்தன் அன்பினில் இணைந்து
காணிக்கை தருகின்றோம் குடும்பமாக
ஒன்றாகுவோம் உமதாகுவோம்
உறவுகள் புதிதாகவே