அழகின் முழுமையே தாயே அலகையின் தலைமிதித்தாயே ***

அழகின் முழுமையே தாயே அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே

1. இருளே சூழ்ந்திடும் போதே உதயதாரகை போலே
அருளே நிறைந்த மாமரியே அருள்வழி காட்டிடுவாயே

2. அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின்செல்வோம்
உன்னைத் துணையாய் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்