இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தங்கத் தேரினிலே திகழும் உன்னத பேரழகே

தங்கத் தேரினிலே திகழும் உன்னத பேரழகே
உதயம் கொண்டெழுந்தே ஊர்வலம் வருவாயே

1. அரும்பிட்ட விழியில் ஆனந்தத் துளிகள்
நிரம்பிட நின்றோமம்மா
கருணையின் வடிவே கலங்கரை விளக்கே
கனிவுடன் பாராயம்மா
நிறை தூய பனிமலரே என்றும் தேடும் நிறை அழகே
உயர் வானின் திரு அமுதே
பூவும் வானும் புகழுமே போற்றுமே மகிழுமே
தாயுன் பாதம் வணங்குமே
என்றும் எந்தன் நெஞ்சம் உந்தன் ஆலயமே

2. தாதையாம் சவியர் மாமுனி அளித்த
அரும் பெரும் திரவியமே
திரைகடல் ஓரம் திகழும் மாமந்திர
எழிலுரும் ஆலயமே
மணியோசை முழங்குதம்மா மனம் யாவும் மலர்ந்தம்மா
தஸ்நேவிஸ் மாமரியே
தரிசனம் தர நீ எழுந்து வா
இறங்கி வா அருள வா
தாரகை மகுடம் அணிந்து வா
விண்ணும் மண்ணும் என்றும் உந்தன் ஆதாரமே