அன்னை மரியாவைப் பார்த்து இறைதூதர் கபிரியேல் " ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " என வாழ்த்துகிறார். இது அவருடைய சொந்த வாழ்த்தொலி. வாழ்த்துதல் எங்கே நடந்தாலும் அத்துடன் மிகைப்படுத்துதல் இணைந்தே வந்துவிடும். ஆனால் அறியாத ஒருவரை பார்த்து மிகைப்படுத்துதல் கடினமே. ஆனால் இந்த இறைதூதர் எதனைக் கண்டு இவ்வாறு வாழ்த்தியிருப்பார்.
முதலாவது அன்னையின் ஆன்மா மிகவும் பிரகாசமாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தூதருக்கே உரிய அதிமகிமையான வட்டம் அன்னையின் முன் நில்லாமல் தூரவே நின்றுவிட்டதை தூதர் உணர்ந்திருக்க வேண்டும். இரண்டாவது அன்னையின் உள்ளத்தில் இறைவனின் தனிப்பட்ட சாயலான நல்லது எனக் காண்பது, அவரில் நிலைத்தும் அதையே விருவாக்காகவும் அன்னை மரியாள் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் மூன்று வயதுக்குபின் பிற ஆடவரின் அறிமுகமேயில்லாமல் வளர்ந்தவர் இப்போது தம்முன் வந்துள்ள நபரைக் கண்டு இனந்தெரியாத பயம் மரியாதை பல உணர்ச்சிப்பட்டவராகத்தான் இருக்க முடியும். ஆனால் அப்படியில்லாமல் அன்னை மரியாள் தூதரோடு பேசியது ' எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும் ' என்ற கூற்றை போல இருந்துள்ளது. மூன்றாவது அவரது சரீரம் ( வாய்) இறைவனையே " தூயவர் தூயவர் " எனப்போற்றி கொண்டிருந்ததால் எழுந்த நறுமணம் இந்த தூதரை மரியாதை செலுத்த வைத்தது. ஆகவே தான் " ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் " (லூக்கா 1 : 2) என வாழ்த்துகிறார்.
' புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர் தியானத்தின் வழியாக கடவுளை கண்டு கொள்ள முடியும் ' புனித பாதரே பியோ கூறுகிறார். அவ்வாறு தான் அன்னை மரியாள் கடவுளோடு இருந்தார் என்பதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடிகிறது. " உன் வயிறு கோதுமை மனியின் குவியல் ;லீலிகள் அதை வேலியிட்டுள்ளன " (இனிமை மிகுபாடல் 7 : 2) என்று கூறுகிறது. இதையே புனித அம்புரோஸ் ' கிறிஸ்து என்னும் ஒரே தானிய மணி இருந்ததெனினும் அது கோதுமை மணியின் குவியல் ' என்கிறார். அன்னையை இறை அறிமுகமாக்கும் தொடக்கநூலில் " உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் "(தொட 3 : 15) என அன்னை மரியாவோடு இணைந்தே வித்துவான இயேசுவை சுட்டிக்காட்டுகிறார். அதனால் இயேசுவும் அங்கே வெளிப்படாமல் சரீரத்தோடுயிருப்பதை இந்த அதிதூதர் கபிரியேல் காண்கிறார்.
இயேசுவுக்கு " கடவுள் நம்மோடு இருக்கிறார் "எனப்பொருள் கொடுக்கிறார் புனித மத்தேயு (மத்தே 1 : 23). ஆகவே அந்நேரத்தைப் பொருத்தமட்டில் இறை தூதரின் வாழ்த்தொலி மிகவும் சரியானதாகத்தான் இருந்துள்ளது. கரையில்லாதவராகத் தமது பணிக்கு இறைவன் அழைத்து உலகுக்கு வகுத்திருந்த திட்டத்தில் அன்னை மரியாளும் தம்முடன் ஒத்துழைப்பார் என இறைவன் அறிந்தே இத்தூதரை தம்மிடம் அனுப்பியுள்ளார் என்று விசுவாசத்துடன் ஏற்றதினால் மறு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் நடக்க வேண்டிய காரணத்திற்கும் யூத குலத்திற்கும் நாம் என்ன பதிலை சொல்லலாம் என்றே அன்னையின் எண்ணம் சிந்தித்தது.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠