திவ்யபலி பூசையில் குருவானவர் அணியும் அங்க வஸ்திரங்களின் பொருளை தெரிந்து கொள்வோம் ***

கழுத்துப்பட்டு -

யூதர் பரிகாசமாக சேசுநாதர் முகத்தை மறைத்ததன் அடையாளம்


வெள்ளை அங்கி -

 சேசுநாதர் பைத்தியக்காரன் என்று பரிகசித்து அவர் மீது போட்ட வெள்ளை சட்டையின் அடையாளம்


இடுப்பு கயிறு -

சேவகர் சேசுநாதரை பிடிக்கும் போது அவரை கட்டின கயிற்றின் அடையாளம்


கையில் அணியும் நீண்ட பட்டு

 சேசுநாதரை கற்றுணில் கட்டியதன் அடையாளம்


கழுத்தில் அணியும் நீண்ட பட்டு

 சேசுநாதர் சிலுவை சுமக்கும் போது அவரை இழுக்க போட்ட நீண்ட கயிற்றின் அடையாளம்


பெரிய பட்டு

 யூதர் சேசுநாதரை பரிகாச இராஜாவாக அவர் மீது போட்ட சிவப்பு பட்டின் அடையாளம்


திவ்யபலி பூசை கல்வாரிப்பலியேதான்

கல்வாரிப்பலி ஊனக் கண்ணுக்கு தெரியும்படி இரத்தம் சிந்திய பலி

திவ்யபலி பூசை ஊனக் கண்ணுக்கு தெரியாமல் இரத்தம் சிந்தும் பலி

குரு கிறிஸ்துவின் பதிலாளாக இருக்கிறார்

இந்நிலவுலகின் உயரிய பதவி குருத்துவம் மட்டுமே