மரியாயின் வழியாக வரிசையில் நின்ற இறைவன் ***

கடவுளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குக் கட்டுபட்டார். மரியா அவரைக் கட்டுப்பட வைத்தார். அப்பொழுது இயேசு மரியாளின் வயிற்றில் இருந்ததால் மனித கோப்புகளில் அவர் இடம்பெறவில்லை. இது நடைபெற்றது கி. மு. 7ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. காலம் நிறைவுற்றபோது " கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் " (கலாத்தியர் 4:5).

   கடவுளும் பெத்லகேமைத் தன் சொந்த ஊராக நினைத்து வரிசையில் சென்று, அன்னை மரியாளின் உதிரத்தில் இருந்து கொண்டு வரிசையில் நின்று, உலகச் சட்டத்திற்குக் கீழ்படிந்தார். இயேசு பிறந்த எட்டாம் நாள் ஆலயத்தில் விருத்தசேதனம் செய்வதற்காக அன்னை மரியாளும், இயேசுவும் வரிசையில் காத்திருந்தனர்.

   அன்னை மரியாளுக்காக வரிசையில் நின்ற இயேசு, மனித கணக்கெடுப்பில் வரவில்லை. ' மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் "தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன் "
(எசாயா 45:15). கணக்கெடுப்பில் அவர் பெயர் பதிவு செய்யப்படவில்லை. அவர் தன்னையே மறைத்துக் கொண்டார்.

   வரிசையில் நின்ற இயேசு சிலுவையில் தொங்கியபொழுது நடுவில் வைக்கப்பட்டார் (மாற்கு 15:27). யோர்தான்  நதிக்கரையில் திருமுழுக்குப் பெறும்போது இயேசு வரிசையில் நின்றார்.

நமது சிந்தனைக்கு : -
------------------------------------
       வரிசையில் நிற்பவர்களை மதித்து அவர்களின் பின்னே ஒருவர்பின் ஒருவராக நிற்பதே நமக்கு மரியாதை. ஆனால் சிலவேளைகளில் நாம் வரிசையில் நிற்பதை தவிர்க்கிறோம். காரணம் வரிசையில் நிற்பது நமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைக்கிறோம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளும், கடவுளின் தாயும் தங்களையே தாழ்த்தி மனிதர்களுடன் வரிசையில் நின்றது, அன்னையும் அவரது மகனும் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அன்னை மரியாளும் இயேசுவும் நமக்குக் கற்றுக்கொடுத்த இந்தப் பாடத்தை நாமும் எப்பொழுதும் பின்பற்ற முயற்ச்சி செய்வோம்.