மறந்தாலும் மறவாத தாய்மரியே உந்தன் மலர்ப்பாதம் பணிவேனம்மா

மறந்தாலும் மறவாத தாய்மரியே - உந்தன்
மலர்ப்பாதம் பணிவேனம்மா
இறந்தாலும் இறவாத மாமரியே - உன்னை
இசையாலே புகழ்வேனம்மா

1. கடலினிலே கண்டெடுத்த விலையுயர்ந்த முத்தினைப் போல்
உலகினிலே இறையவனின் சொத்தாகினாய்
பல வழியில் நிலைமாறி தடுமாறும் மானிடரை
திருமகனின் பதம் சேர்க்கும் வழியாகினாய்

2. இறைவார்த்தை நிதம் கேட்டு இதயத்தில் தியானித்து
கறையேதும் இல்லாமல் சிறந்தோங்கினாய்
முறையாக இவ்வுலகில் இறைஇயேசு வழி வாழ
குறையாத அருள்பொழியும் சுனையாகினாய்