கையளிக்கின்றேன் இறைவா ***

கையளிக்கின்றேன் இறைவா - எந்தன்
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு

1. வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன்
அருள்நிலை ஒன்றே மேலானது
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - எல்லா
வரங்களையும் விட மேலானது

2. செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன்
இதயமும் உமது முன் நிறைவு பெறும்
முழுமை என் உள்ளத்தை நிரப்பிடவே - நாவில்
மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும்