அழகுமில்லை எந்த வடிவுமில்லை

 அழகுமில்லை எந்த வடிவுமில்லை

விரும்பத்தக்க ரூபம் அவருக்கில்லை 

இவ்வளவாய் நம்மில் அன்பு கூர்ந்தார் 

பாவிகள் நமக்காக தன்னைத் தந்தார் 

இயேசு.. இயேசு... 

உனக்காக பாடுகள் பட்டார் 

இயேசு.. இயேசு ..

நமக்காக இரத்தம் சிந்தினார் 


தாடியைப் பிய்த்தவனுக்கும் 

முள்முடியை சூட்டினவனுக்கும் 

கன்னத்தில் அறைந்தோனுக்கும் 

காறி உமிழ்ந்தோனுக்கும் (2)

எதிர் பேசாமல் அமர்ந்திருந்தார் 

பதில் வையாமல் சகித்திருந்தார் (2)

இயேசு.. இயேசு.. 

உனக்காக சிறுமைப்பட்டார் 

இயேசு.. இயேசு… 

நமக்காக சகித்துக்கொண்டார் 


பலியிட நடத்தப்படும் 

ஆட்டுக்குட்டி போலவும் 

மயிர் கத்தரிக்க செல்லும் 

செம்மறியை போலவும் (2)

வாய் திறவாமல் மெளனமாய் இருந்தார்

சிலுவையைச் சுமந்து கொண்டு தள்ளாடி நடந்தார்

வாய் திறவாமல் மெளனமாய் இருந்தார்

சிலுவையைச் சுமந்து கொண்டுஅவர் நடந்தார்

இயேசு ..இயேசு ..உனக்காக தண்டிக்கப்பட்டார் 

இயேசு ..இயேசு ..நமக்காக வாதிக்கப்பட்டார் 


கொலைக்குற்றவாளி போல 

கைது செய்து தீர்ப்பிடப்பட்டார் 

கள்வரில் ஒருவர் போலவே 

சிலுவையில் அறையப்பட்டார் (2)

சாட்டைகளால் மேனி கிழிக்கப்பட்டார் 

ஆணிகளால் கை கால் கடாவப்பட்டார் 

இயேசு ..இயேசு.. 

உனக்காக நெருக்கப்பட்டார் 

இயேசு.. இயேசு.. 

நமக்காக நொறுக்கப்பட்டார்