அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா ***

அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா
தன்னையே தந்துலகைத்தான் மீட்க வந்தவராம்
மன்னவராம் ஆண்டவரை மகனாகத் தந்தவளே
உன்னையே நம்பிவந்தேன் உற்றதுணை செய்யம்மா
அம்மா தேவனின் தாயே அருளமுதான கடலே
துணை செய்வாய் நீயே ஆரோக்கியத்தாயே

1. எம்மான் இயேசுவைத் தந்தவள் நீயே
எங்கள் நலம் காக்க வந்தவள் நீயே
உம்மால் ஆகாத செயலில்லை தாயே
உலகத்தின் அன்புக்கு எல்லையும் நீயே

2. பிறைசூடும் உன் பாதம் கண்ணீரால் நனைத்தேன்
மறைதந்த மகனிடம் சொல்ல நான் அழைத்தேன்
கரையில்லா கடலான அன்புக்கு வித்தே
கருணையின் மெழுகான கடவுளின் முத்தே

3. துன்பங்கள் எனை வந்து தொடராமல் தாயே
அன்பான உன் நிழல் அண்டினேன் சேயே
கண்போல என்னைக் காத்தருள் நீயே
கடலாடும் வேளாங்கண்ணித் தாயே