எதை நான் தருவேன் இறைவா ***

எதை நான் தருவேன் இறைவா - உம்
இதயத்தின் அன்பிற் கீடாக
எதை நான் தருவேன் இறைவா

1. குறை நான் செய்தேன் இறைவா - பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா
கறையாம் பாவத்தை நீக்கிடவே
நீ கல்வாரி மலையில் இறந்தாயோ

2. பாவம் என்றொரு விஷயத்தில் நான்
பாதகம் செய்தேன் இறைவா
தேவனே உன் திருப்பாடுகளால்
எனைத் தேற்றிடவே நீ இறந்தாயோ

3. அகிலமே அறிவால் அளந்தேன் - உன்
அன்பையும் அறிந்து மறந்தேன்
மகிமை நிறைந்த எம் இறைவா
நீ மனிதன் எனக்காய் இறந்தாயோ