இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார் ***

இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார்
அவரைக் கொண்டு நான் வாழ
எவரைக் கண்டும் பயமில்லை

1. வாழ்வில் இறைவன் துணையானார்
வாழும் எனக்கு உயிரானார்
தீயோர் என்னை வதைத்தாலும்
தீமை அணுக விடமாட்டார்

2. தீயோர் படைபோல் சூழ்ந்தாலும்
தீராப் பகையைக் கொண்டாலும்
தேவன் அவரைத் திடமாக
தேடும் எனக்குக் குறையேது

3. ஒன்றே இறைவா வேண்டுகிறேன்
ஒன்றே அடியேன் தேடுகிறேன்
தேவன் உமது திருமுன்னே
நாளும் வாழ அருள்வாயே