ஜெபமாலைப் பக்தி ***

நம் தேவ அன்னை ஜெபமாலையை எவ்வளவு உயர்வாகக் கருதுகிறார்கள் என்றும், மற்ற எந்த பக்தி முயற்சிகளையும் விட இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றும் வார்த்தைகளாக கூற என்னால் இயலாது. ஜெபமாலைப் பக்தியைப் பிரசிங்கிப்பவர்களுக்கு தேவ அன்னை எவ்வளவு மேலான வெகுமானம் அருளுகிறார்கள் என்றும் ஜெபமாலைக்கு எதிராக வேலை செய்கிறவர்களை எவ்வளவு உறுதியாக தண்டிக்கிறார்கள் என்றும் என்னால் போதிய அளவு எடுத்துரைக்க முடியாது (அப்படியென்றால் அதற்கும் அதிகமாக என்று அர்த்தம்)

தன் வாழ்நாள் முழுவதும் அர்ச். சாமி நாதர் வேறு எதையும் விட தேவ தாயை போற்றுவதிலும், அவர்களின் மேன்மையை உரைப்பதிலும், எல்லாரும் ஜெபமாலையால் அவைகளை வாழ்த்தும்படி தூண்டும்படியும் கருத்தாயிருந்தார். இதற்கு ஒரு பரிசாக தேவதாயிடமிருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றார். பரலோக அரசி என்ற முறையில் நம் அன்னை, தமக்குள்ள பெரிய வல்லமையால் அவருடைய உழைப்பை பல அற்புதங்களாலும் புதுமைகளாலும் விளங்கச் செய்தார்கள்.

தேவ அன்னையின் வழியாக அவர் இறைவனிடம் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார். அவர் அடைந்த மகிமையில் சிறந்தது ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தை அன்னையின் உதவியால் முறியடித்ததும், ஒரு பெரிய துறவற சபையை நிறுவி அதன் மூப்பராக இருந்ததுமே…

ஜெபமாலைப் பக்தியை புதுப்பித்த முத்.ஆலன் ரோச் எத்தகைய மகிமையை அடைந்தார் என்பதை  நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்....