தாயிருக்க அவள் தயவிருக்க
தாழ்வதில்லை நாம் வீழ்வதில்லை
மரியே உலகின் தாய்
அவள் போல் மாறா அன்புத்தாய் உண்டோ
1. அடிமையென தனைத் தாழ்த்தி
உரிமையை நமக்களித்தாள்
பொறுமையுடன் திருமகனை நமக்காய் பறிகொடுத்தாள்
நம் சிறுமை அவள் பொறுப்பாளோ
ஸா நீ தம மா ரிம பநி தம பா
பா மா பா தா மா மா கா ரிக ஸா
வறுமையில் நம்மை விடுவாளோ ஆ
2. அம்மாவெனத் தன் குழந்தை அழைத்திட விரும்புகிறாள்
தன் மழலைக் குரல் கேட்டு மனம் மகிழ்ந்துருகுகிறாள்
தினம் அம்மா மரி என அழைப்போம்
அன்பாய் நம் குறை அவள் தீர்ப்பாள்