இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள் ***

விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிட வாருங்களே
புது உலகமைத்திட புதுவழி படைத்திட
அன்புடன் வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே

1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார்
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம்
சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்

2. ஏழை எளியவர் வாழும் இடங்களே
இறைவன் வீடாகும்
வறுமைப் பிடியிலே அலறும் குரல்களே
இறைவன் மொழியாகும்
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம்
இறைவனின் அரசின் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம்