அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் ***

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய் கூடி
வாழ்த்திப் போற்றிடுவோம்

1. அருள் நிறைந்த அம்மணி அகிலம் போற்றும் நாயகி
ஆண்டவனின் அன்புத்தாயும் நீ எங்கள் அன்னையே
காத்திடும் எங்கள் அன்னைமரி

2. அமல உற்பவம் நீ அன்றோ அடைக்கலமும் நீ அன்றோ
அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே

3. துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ
தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே