உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை ***

உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொத்தும் இல்லை
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை

1. கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன்
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை

2. நெஞ்சுக்குள்ளே வந்துவிடு நிம்மதியை தந்துவிடு
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு