இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் ***

அருட்கரம் தேடி உன் ஆலயபீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்

1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை
மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ
நிதம் வருமோ ஒளியிருக்க
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்

2. ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே
தேற்றிட விரையும் எம் தலைவா - உன்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ
துயர் வருமோ துணையிருக்க
அருளின் பொழிவால் ஆறுதல் வழங்கும்