கருணை நிறைந்தவளே அம்மா கனிவைக் கொடுப்பவளே

கருணை நிறைந்தவளே அம்மா கனிவைக் கொடுப்பவளே
பரிந்து பேசுபவளே நீ கன்னி மாமரியே ஆவே ஆவே

1. பாவமின்றிப் பிறந்தவளே பாவையர்க்கு மாதிரியே
ஆவியினால் நிறைந்தவளே ஆண்டவர்க்குப் பணிந்தவளே
பாவம் செய்த இம்மானிடர்க்கு
உன் மகனைக் கொடுத்தவளே
வாழ்க அம்மா வாழ்க நீ வாழ்க என்றும் வாழ்க

2. வாழ்வினிலே ஒளிவிளக்காய் வாழ்ந்து வரும் நாயகியே
பாரினிலே மாந்தருக்கு வழித்துணையாய் இருப்பவளே
பாதம் தேடி உனை நாடி வந்தோம்
அணைத்தெம்மைக் காத்திடுவாய்