உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா

1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய்
பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்

2. கடல் நீரும் கூட உன் கோவில் காண
அலையாக வந்தே உன் பாதம் சேரும்
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா

3. மலடான மங்கை மடி மீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எமக்கு ஒளி தாரும் தாயே