நற்கருணையை கரங்களில் வாங்குவோர் சொல்லும் காரணங்கள் ***


அதற்கு முன் : நற்கருணையை கரங்களில் எப்படி வாங்குகிறார்கள் பார்த்திருக்கிறீர்களா?.  நிறைய மக்கள் இடது கைகளில் வாங்கி வலது கைக்கு மாற்றி உண்கிறார்கள். இவர்களில் யாராவது சாப்பிடும் உணவை இடது கைகளால் உண்பார்களா? நற்கருணைக்கு மட்டும் ஏன் இடது கை ? சரி அவர்கள் கூறும் காரணங்களுக்கு செல்வோம்.

1. சுகாரத்திற்காகவாம்

2. தொற்று நோய் பரவாமல் தடுக்கவாம்

2. எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்கவாம்

(அதிர்சி அளிக்கிறது இப்பதில்கள் )

அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி,

1.  நற்கருணையில் இருப்பது யார் ? ஆண்டவரல்லவா? 

2. அதுவும் தமதிருத்துவம் ( பிதா, சுதன், பரிசுத்த ஆவி

3. கடவுள் பரிசுத்தர், உன்னதர், தூயவர்

4. பரிசுத்தரான கடவுள், நோயை பரப்புவாரா? அல்லது குணமாக்குவாரா?

5. கடவுள் நற்கருணையில் இருப்பதை  நீங்கள் உண்மையிலேயே விசுவசிப்பவர்களா அல்லது இல்லையா?

6. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாவில் வாங்கினோமே, அப்போது எதாவது யாருக்காவது நோய் பரவியதா இல்லையே பின் ஏன் உங்களுக்கு சந்தேகம்?

7. இயேசுவுக்கே ஹைஜினிக் (Hygienic) பார்ப்பவர்களா நீங்கள்? அவர் திருப்பி அதே ஹைஜினிக்கை நம் ஆன்மாவில் பார்த்தால் நாம் என்னவாவோம்.

ஏன் ஏன் ஏன் இந்த விசுவாசக்குறைவுகள், அவ நம்பிக்கைகள், சந்தேககங்கள், குழப்பங்கள்.

குழப்பமான மன நிலையில் இயேசுவை வாங்குவது சரியா?

அன்பான மக்களே ! நாம் ஏன் அடுத்தவரை பின் பற்ற வேண்டும்? ஏற்கனவே மற்றவருக்காக இழந்தது போதாதா? சிந்தியுங்கள்....

அதே போல் நாவில் திவ்ய தமதிருத்துவத்தை வாங்குபவர்களும் சரியான, முறையான தயாரிப்பு செய்து நல்ல பாவசங்கீர்த்தனம் (முடிந்தவரை) தகுதியான உள்ளத்தோடு வாங்குவோம்... செம்மரியின் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களான அதுவும் பேறுபெற்றவர்களான நாம்...