இன்றைய புனிதர் - ஜனவரி 8 - நோரிகம் நகர புனிதர் செவரினஸ் ***


நோரிகம் நகர புனிதர் செவரினஸ்

(St. Severinus of Noricum)

பழங்குடியின மக்களின் கூட்டமைப்பான "நோரிகம்" அப்போஸ்தலர்: 

(Apostle to Noricum Federation of Tribes)

பிறப்பு: கி.பி. 410

தென் இத்தாலி அல்லது ஆப்பிரிக்கா

(Southern Italy or Africa)

இறப்பு: ஜனவரி 8, 482 

ஃபவியானே, நோரிகம் (தற்போதைய ஆஸ்திரியா)

(Favianae, Noricum (Modern Austria)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள்:

சேன் செவேரினோ துறவு மடம், நேப்பிள்ஸ், இத்தாலி

(Abbey of San Severino, Naples, Italy)

நினைவுத் திருநாள்: ஜனவரி 8

பாதுகாவல்:

நோரிகம் (தற்போதைய ஆஸ்திரியா) சேன் செவேரோ, இத்தாலி, ஸ்ட்ரியானோ

(Noricum (Modern Austria); San Severo, Italy; Striano)

நோரிகம் நகர புனிதர் செவரினஸ், ஒரு கிறிஸ்தவ புனிதர் ஆவார். இவர் பழங்குடியினர் கூட்டமைப்பான "நோரிகம் அப்போஸ்தலர்" (Apostle to Noricum) என்றும் அறியப்படுகின்றார். இவர் தென் இத்தாலி அல்லது ரோம பிராந்தியமாயிருந்த ஆப்பிரிக்காவில் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

உயர்குடியில் பிறந்த மர்ம மனிதரான செவரினஸ், கிறிஸ்தவ மறை போதனைகளுக்காகவும் ஏழைகளுக்கு அவசியப்படும் பொருட்களை வாங்கி விநியோகம் செய்யும் நோக்கிலும் சிறைப்பட்டவர்களை மீட்கும் நோக்கத்திற்காகவும் நோரிகம் (Noricum) மற்றும் பவேரியாவிலுள்ள (Bavaria) "டனூப்” (Danube) நதியோரமாக பயணித்துள்ளதாக இவரைப்பற்றிய தகவல்கள் கூறுகின்றன.

இவர், நோரிகம் என்ற பழங்குடியினர் கூட்டமைப்புக்கு மறைபரப்பு பணியை செய்ய வந்தார் என்று கூறப்படுகின்றது. அதன்பிறகு ஆஸ்திரியா வந்தடைந்து மறைப்பணியை ஆற்றியுள்ளார்.

மறைப்பணியோடு தேவையிலிருக்கும் மக்களை இனம்கண்டு, பல்வேறு விதங்களில் உதவி செய்துள்ளார். கிறிஸ்தவ மக்களின் மனதிலும், அவர்களின் மத்தியிலிருந்து தாழ்வு மனப்பான்மையை போக்கவும் பெருமளவில் உழைத்துள்ளார்.

ஆரியன் இன மக்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை களைய பாடுபட்டார். சந்தோசமாகவும், சமாதானமாகவும் வாழ வழிவகுத்தார்.

இவர் "பஸ்ஸாவூ” (Passau) மற்றும் “ஃபவினே" (Favianae) ஆகிய இடங்களில் துறவு மடங்களை நிறுவினார். அந்நிய இனத்தாரால் சூறையாடப்பட்ட பிராந்தியங்களில் நல்வாழ்வு மையங்களை நிறுவினார். கண்ட இடத்திலும் ஒரு கோணித் துணியை விரித்து உறங்கினார். தீவிர நோன்பிருந்தார். இவரது மறை பரப்பும் முயற்சிகளால் ஜெர்மானிய குறுநில அரசன் "ஓடோசெர்" (Odoacer) உள்ளிட்ட அனைவரிடத்தும் இவருக்கு பரவலான பாராட்டுதலும் மரியாதையும் கிட்டியது.

"அட்டிலா" (Attila) என்ற பேரரசனின் மேற்பார்வையின் கீழே "ஹுன்ஸ்" (Huns) எனும் சிற்றரசனுடைய படையெடுப்பால் ஆஸ்திரியா அழியும் எனவும் தீர்க்கதரிசனமாக கூறினார். படையெடுப்பினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்து அகதிகளாய்ப் போன மக்களுக்காக மறுவாழ்வு மையங்களை நிறுவினார். ஆன்மீகத்தையும் ஆன்மீக கற்பித்தலையும் நிலை நிறுத்த மடங்களை நிறுவினார்.

செவரினஸ், "ஃபவியானே" (Favianae) என்ற இடத்திலுள்ள தமது துறவு மட அறையில் திருப்பாடல்கள் 150ஐ பாடிக்கொண்டிருக்கையில் மரணமடைந்தார். அவரது மரணத்தின் ஆறு வருடங்களின் பின்னர், அவரது மடத்திலிருந்த துறவிகள் துரத்தப்பட்டு, அவருடைய உடல் இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் "நேப்பில்சில்' (Naples) உள்ள "கேஸ்டல் டெல்ஒவோவில்" (Castel dell'Ovo) வைக்கப்பட்டது. இறுதியில், நேப்பில்சின் (Naples) அருகேயுள்ள, அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட "பெனடிக்டைன் துறவுமடமான" (Benedictine monastery) "சேன் செவரிநோவில்" (San Severino) அடக்கம் செய்யப்பட்டது.

செவரினஸ், "துறவி, புனித அந்தோனியாரின் (St. Anthony the Hermit) குழந்தைப் பருவ பாதுகாவலரும் ஆன்மீக தந்தையும் ஆவார்.