இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

74 ஆரோக்கிய அன்னை ஆராதனை ஆலயம், வேளாங்கண்ணி


ஆராதனை ஆலயம்

இடம் : வேளாங்கண்ணி

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்.

திருத்தல அதிபர் : பேரருட்பணி பிரபாகரன் அடிகளார்

இணை அதிபர் பங்குத்தந்தை : அருட்பணி சூசை மாணிக்கம்.

வரலாறு :

ஆராதனை ஆலயம்

ஜெபிக்க,தியானிக்க ஏற்ற இடம்

திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் ஜெப அனுபவம் பெறவேண்டும் என்பதற்காக நற்கருணை ஆலயமும் ,ஆராதனை ஆலயமும் அதனுடன் இணைந்த ஒப்புரவு அருட்சாதன ஆலயமும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆலயத்தில் ஜெப ஊற்று ,ஆலோசனை மையம் ஆகியவை இயங்கி வருகின்றன.

மாதா குளம் செல்லும் பாதையில் ஒருபுறம் சிலுவைப்பாதை ஸ்தலங்களை விவரிக்கும் சுரூபங்களும் மறுபுறம் ஜெபமாலை சொல்லும் வகையில் ஜெபமாலை மறை உண்மைகளை சொல்லும் சுரூபங்களும் மாடங்கள் வடிவத்தில் அழகுற அமைக்க பட்டு உள்ளன.

பொது நிலையினரும் இறை அனுபவம் பெரும் வகையில் அமைதியான சூழலில் திருத்தல தியான இல்லம் இயங்கி வருகிறது.