திருவிவிலியத்தில் மாதா-3 : சாலமோனின் ஞானத்தில் மாதா : ***

"ஞானம் அசைவுகளிலெல்லாம் மிக விரைவானது. அதன் தூய்மையின் காரணத்தால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது, எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது."

"அது கடவுளுடைய வல்லமையின் ஆவி; எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்; ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது."

"அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி; அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்."
ஞான ஆகமம் ( சாலமோனின் ஞானம)் 7 : 24-16

ஏற்கனவே இருக்கும் ஞானம் பரம பிதா. சிருஷ்ட்டிக்கப்பட்ட ஞானம் நம் தேவ அன்னை, மேலே உள்ள இறைவசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை.

ஞானம் நிறை கன்னிகையே…நாதனைத் தாங்கிய ஆலயமே…

சீராக்கின் ஞானம் :

“ நான் அரிய அன்பினுடையவும் அச்சத்தினுடையவும் அறிவினுடையவும் புனித தெய்வ நம்பிக்கையினுடையவும் தாயாய் இருக்கிறேன்.” சீராக் ஆகமம் 24:24

மேலும் மாதாவின் மேல் உள்ள அன்பு தகுதியற்றவருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு உதாரணம். மாதாவின் முன்னோடி ரெபேக்காள்.. இது புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்டின் விளக்கம்..

யாக்கோபு தன் தாயாரை நேசித்தார் ரெபேக்காளும் தன் இளைய மகனான யாக்கோபை நேசித்தார். யாக்கோபு தன் தாயாருக்கு உதவி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

" இரேபேக்காள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எசாயூ தந்தையின் கட்டளையை நிறைவேற்றும்படி காட்டிற்குப் புறப்பட்டுப் போனவுடனே, அவன் தன் மகன் யாக்கோபை நோக்கி:

"உன் தந்தை, உன் தமையன் எசாயூவுக்குச் சொன்னதை நான் கேட்டேன். அது என்னவெனில்:

நீ போய் வேட்டையாடி, வேட்டையில் கிடைத்ததைச் சமைத்துக் கொண்டு வந்தால், நான் அதை உண்டு, எனக்குச் சாவு வருமுன் ஆண்டவர் திரு முன் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார்."

ஆதலால், மகனே, என் சொல்லைக் கேள்.

நீ ஆட்டு மந்தைக்கு ஓடிப் போய் இரண்டு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவா. நான் அவற்றை உன் தந்தை விரும்பக் கூடிய சுவையுள்ள கறிவகைகளாகச் சமைப்பேன்.

நீ அவற்றை அவருக்குக் கொடுப்பாய். உண்டு முடித்த பின், சாகுமுன் அவர் உன்னை ஆசிர்வதிக்கக் கடவார் என்று சொன்னாள்."

ஆதியாகமம் (தொடக்க நூல்) 27 : 5-11

மாதா மீது பக்தி நமக்குப் பாதுகாப்பானது.
அளப்பரிய நன்மைகளைப் பெற்று தருகிறது. ஆறுதலும் அடைக்கலமும் தருகிறது. மாதாவின் மீது வைத்தல் என்பது பெயரளவில் அல்ல. தினமும் ஒரு 53 மணிகளாவது ஜெபமாலை ஜெபித்தலில் அடங்கியுள்ளது.

குறிப்பு : மாதாவின் பெருமைகள், மாதா குறித்த விவிலிய விளக்கங்கள், ஜெபமாலையின் இரகசியம் மற்றும் தேவைகள், திவ்ய திருப்பலியின் இரகசியங்கள், கத்தோலிக்க திருச்சபையின் பெருமைகள் குறித்து உங்கள் பங்கில் தியானம் நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்…

சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை, Ph: 9094059059, 9790919203

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !