கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 18 /25 ***


“ வலியோரை அரியணையினின்று அகற்றினார், தாழ்ந்தோரை உயர்த்தினார். பசித்தோரை நலன்களால் நிரப்பினார். செலவரை வெறுங்கையராய் அனுப்பினார் “

                                     லூக்காஸ் 1 :52-53

வலியோரை ஏன் அரியணையின்று அகற்ற வேண்டும்?. செல்வரை ஏன் வெறுங்கையராய் அனுப்பவேண்டும் ?

வலியோர் அவர்களைக்கு கொடுக்கப்பட்ட தகுதியையும், திறமையையும், அதிகாரத்தையும், நல்லவிதமாக பயன்படுத்தவில்லை. மாறாக தவறாக பயன்படுத்துகிறார்கள். ஏன் இஸ்ராயேல் மக்களை எடுத்துக்கொள்வோம் அவர்கள் கேட்டுக்கொண்டாதால் நேரடியான தன் ஆட்சியை அரசர்கள் மூலம் மக்களுக்கு அளித்தார். ஆனால் அரசர்கள் அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். தன் சுய நலத்திற்காக பயன்படுத்தினார்கள். கடவுளை மறந்தார்கள். மக்களும் கடவுளை மறக்க வைத்தார்கள். அதன் விளைவு ?

அதே போல செல்வந்தர்களைப் பற்றியும் ஏன் இயேசுவே நிறைய பேசியிருக்கிறார். “ ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வர்கள் விண்ணரசில் நுழைய மாட்டார்கள் “ என்று சொன்னார்.

ஏன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. அந்த அதிக செல்வத்தால், சுகபோக வாழ்வால் எளிதாக தவறான பாதையில் செல்ல முடிகிறது. செல்வத்திற்கும், கடவுளுக்கும் ஊழியம் செய்வது சாத்தானுக்கும், கடவுளுக்கும் ஊழியம் செய்வதுபோன்றது என்றும் சொல்கிறார். அதே செல்வத்தை குறைந்த பட்சம் தனக்கு போக உள்ள மீதியையாவது. நல்ல வழியில் செலவிடுகிறார்களா? அதுவும் இல்லை. விளைவு ?

இரண்டுமே அவரகளிடமிருந்து பிடுங்கி எறியப்படுகிறது...

என்றைக்குமே இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பையும் பொருளையும் சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் கண்டிப்பாக அது பறிக்கப்படும்.

இயேசுவின் தாலந்து உவமை கூட அதையே சொல்கிறது. ஒரு தாலந்து கொடுத்தவன் அதை சரியாக பயன்படுத்தாததால் அது அவனிடமிருந்து பிடுங்கப்படுகிறது..

அன்பான மக்களே ! இறைவன் எல்லாரையும் பார்க்கிறார், எல்லாவற்றையும் பார்க்கிறார். கணக்கிலும் அவர் புலிதான். எல்லாருக்கும் கூட்டல், கழித்தல் கணக்கு அவரிடம் உள்ளது. யாரை ஏமாற்றினாலும் அவரை ஏமாற்ற முடியாது..சிந்திப்போம்

ஜெபம் :

எல்லாம் தெறிந்த எல்லாரையும் அறிந்த அன்பு இறைவா ! எங்களுக்கும் நீர் நிறைய தாலந்துகள் கொடுத்துள்ளீர். ஆனால் நாங்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. எங்கள் செல்வங்களையும் நாங்கள் எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவுமே பயன்படுத்துகிறோம். செல்வம், அதிகாரம் என்ற போதை எங்கள் கண்களை மறைத்துவிடுகிறது. உம்மையும் காணாமல் செய்துவிடுகிறது. வலிமையின் நாயகனே எங்களுக்கு வலிமை, துணிச்சல், பக்குவம், பிறரன்பு தாரும்.

எங்களுக்கு நீர் கொடுத்த தகுதியையும், அதிகாரத்தையும், செல்வத்தையும், தாலந்தையும் சரியாக பயன்படுத்த உமது ஆசீரையும், வரங்களையும் வேண்டி உம் வரவுக்கான தயாரிப்பில் இறங்க வரம் தாரும் -ஆமென்