இன்றைய புனிதர் - ஜனவரி 13 - பாய்ட்டியர்ஸ் நகர் புனிதர் ஹிலாரி ***


பாய்ட்டியர்ஸ் நகர் புனிதர் ஹிலாரி

(St. Hilary of Poitiers)

ஆயர், ஒப்புரவாளர், மறை வல்லுநர்:

(Bishop, Confessor and Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 310

பிக்டாவியம், கௌல் (தற்போதைய பொய்ட்டியர்ஸ், ஃபிரான்ஸ்)

(Pictavium, Gaul (Modern-day Poitiers, France)

இறப்பு: கி.பி. 367

பாய்ட்டியர்ஸ்

(Poitiers)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரன் திருச்சபை

(Lutheran Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)

நினைவுத் திருநாள்: ஜனவரி 13

பாய்ட்டியர்ஸ் நகர புனிதர் ஹிலாரி, “பாய்ட்டியர்ஸ்” (Bishop of Poitiers) மறை மாவட்ட ஆயரும், திருச்சபையின் “மறை வல்லுனரும்” (Doctor of the Church) ஆவார். இவர் "ஆரியன் இனத்தவரின் சுத்தியல்" (Hammer of the Arians) என்றும், "மேற்கின் அதானாசியஸ்" (Athanasius of the West) என்றும் அழைக்கப்படுகின்றார். இலத்தீன் மொழியின்படி, இவரது பெயருக்கு “மகிழ்ச்சி” அல்லது “சந்தோசம்” என்றும் பொருள்படும்.

பாய்ட்டியர்ஸ் நகரில் நான்காம் நூற்றாண்டின் ஆரமபத்தில் பிறந்த இவருடைய பெற்றோர் வேறுபட்ட சபையின் "பாகன்" இனத்தவர் ஆவர். கிரேக்க மொழி உள்ளிட்ட பாகன் கல்வி இவருக்கு தரப்பட்டது. பின்னர் இவர் கற்ற பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் பற்றிய கல்வி, இவர் கொண்டிருந்த "3ம் நூற்றாண்டில் பிலாண்டினஸ் பின்பற்றுபவர்கள் உருவாக்கிய ஒரு தத்துவ மற்றும் சமய அமைப்பு" (Neo-Platonism) கிறிஸ்தவத்திற்காக கைவிட நேர்ந்தது. பின்னர் அவர், தமது மனைவி, மற்றும் பாரம்பரியப்படி, “புனித அப்ரா” (Saint Abra) எனும் தமது மகளுடன் திருமுழுக்கு பெற்று திருச்சபையில் இணைந்தார்.

அக்காலத்தில், கி.பி. சுமார் 350ம் ஆண்டு, அல்லது 353ம் ஆண்டு, பாய்ட்டியர்ஸ் நகர மக்கள் ஹிலாரியை மிகவும் மதித்தனர். அவர்கள் அவரை தமது ஆயராக மறைமுகமாக தேர்ந்துகொண்டனர். அக்காலத்தில், மேற்கத்திய திருச்சபையை ஆரியனிசம் (Arianism) கைப்பற்றும் அச்சுறுத்தல் இருந்தது.

இந்த இடையூறுகளைத் தடுக்க ஹிலாரி நடவடிக்கை மேற்கொண்டார். “சடுர்நினஸ்” ((Saturninus) எனும், "ஆர்லஸ்" என்ற மறைமாவட்டத்தின் ஆரியன் ஆயர், (The Arian Bishop of Arles) மற்றும் அவரது ஆதரவாளர்களான "யுர்சாசியஸ் மற்றும் வலேன்ஸ்" (Ursacius and Valens) ஆகிய மரபுவழி திருச்சபைக் கிறிஸ்தவர்களின் "கல்லிசன் தலைமைக் குருக்களைக்கொண்டு" (Gallican hierarchy) திருச்சபையைக் காக்க அவர் முதல் நடவடிக்கை எடுத்தார்.

இதே காலகட்டத்தில், ஆரியர்கள் தமது எதிர்ப்பாளர்களை நசுக்க வேண்டி செய்யும் துன்புருத்தல்களைக் கண்டித்து, பேரரசர் “இரண்டாம் காண்ஸ்டன்ஷியசுக்கு" (Emperor Constantius II) ஹிலாரி ஒரு கண்டன கடிதம் எழுதினர். சரித்திர வல்லுனர்கள் இதனை, நடைமுறையில் சில பாகங்களே உள்ள (Book Against Valens) என்று குறிப்பிடுகின்றனர். இம்முயற்சிகள் ஹிலாரிக்கு முதலில் வெற்றியைத் தரவில்லை.

வனவாசத்திற்கான காரணங்கள் மறைத்தே வைக்கப்பட்டிருந்தன என்றாலும், ஹிலாரி ஏறத்தாழ நான்கு வருடங்கள் வெளிநாட்டில் செலவிட்டார். அதானாசியுஸின் கண்டனம் மற்றும் (Nicene) மீதான விசுவாசத்தை அவர் ஏற்க மறுத்ததாலேயே அவர் நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் உறுதி செய்கின்றன.

நான்கு வருட வெளிநாட்டு வாசத்தின் பின்னர், 361ம் ஆண்டு, சொந்த மறைமாவட்டம் திரும்பிய ஹிலாரி, முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பெரும்பகுதியை உள்ளூர் மத குருமார்களை சமாதானப்படுத்துவதில் செலவிட்டார்.

சுமார் 360ம் ஆண்டு, ஹிலாரியின் ஊக்குவிப்பால் "டூர்ஸ்" மறைமாவட்டத்தின் பதவியேற்கவிருந்த ஆயர் மார்ட்டின் (Martin, the future bishop of Tours), "லிகுக்" (Ligugé) என்ற இடத்தில் ஒரு துறவு மடம் ஒன்றினை நிறுவினார்.

புனிதர் ஜெரோம் (St. Jerome) அவர்களின் கூற்றுப்படி, கி.பி. 367ம் ஆண்டு, பாய்ட்டியர்ஸ் நகரில் ஹிலாரி மரித்தார்.