இயேசு நாதர் பாடுபட்ட முதல் ஸ்தலம் : இயேசு ஆண்டவர் தீர்ப்பிடப்படுகிறார்.
சுவாமியை தீர்ப்பிடும் முன் நம்மை நாமே தீர்ப்பிடுவோம். நான் யார்? நான் கடந்து வந்த பாதைகள் என்ன? இப்போது எப்படி இருக்கிறேன். ஒரு நல்ல கிறிஸ்தவனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மனிதனாக இருக்கிறேனா? ஒரு நல்ல தந்தையாக இருக்கிறேனா? ஒரு நல்ல மகனாக இருக்கிறேனா? ஒரு நல்ல இளைஞனாக இருக்கிறேனா? ஒரு நல்ல மாணவனாக இருக்கிறேனா? இதே போல் பெண்களும் ஒரு நல்ல கிறிஸ்தவளாக, நல்ல மனுசியாக, நல்ல தாயாக, நல்ல மகளாக, ஒரு நல்ல இளம்பெண்ணாக, ஒரு நல்ல மாணவியாக இருக்கிறேனா ?
அவற்றில் எதாவது சரியில்லாமல் இருந்தால் சரிப்படுத்துவோம். எது நம் பலம்? எது நம் பலவீனம்? என்பது கண்டுபிடிப்போம். அதே வேளையில் இயேசு சுவாமியை முழுமையாக அனுக முடியாமல் நமக்கு தடையாக இருப்பது என்ன ? என்பதையும் கண்டுபிடிப்போம். நாம் ஏற்கனவே சொன்னமாதிரி நமது பலவீனங்களை நிரந்தரமாக களைய முயற்சியும், பயிற்சியும் எடுப்போம்.
இயேசு சுவாமியை யார் யாரோ தீர்ப்பிட்டார்கள்? என்ன என்னவோ குற்றம் சுமத்தினார்கள். யார் யாரோ அடித்தார்கள். யார் யாரோ “ "இவனைச் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் " என்று கத்தினார்கள்”
அவருக்கு ஆதரவாக பேச ஒரு ஜீவன் இல்லை. ஒரு நாதி இல்லை. இவர் குற்றமற்றவர் என்று சொல்ல ஒரு நாவு இல்லை. இதே போல் நாமும் சில நேரம் செய்யாத குற்றங்கள் சுமத்தப்படுகிறோம். இல்லாதது பொல்லாததால் சுமத்தப்படுகிறோம்.
அப்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம். ஊரைக்கூட்டுகிறோமா? கூச்சல் போடுகிறோமா? கத்துகிறோமா? அல்லது இயேசு சுவாமியைபோல் மொளனம் காக்கிறோமா?
“ நான் பேசியது தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு. பேசியது சரினால் ஏன் என்னை அடிக்கிறாய் “ அடித்தவனுக்கு ஆண்டவர் சொல்லும் பொறுமையான பதில்.
“ உண்மைக்கு சாட்சியம் சொல்வதே எனது பணி. அதற்காகவே பிறந்தேன் அதற்காகவே இவ்வுலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவன் எவனும் என் குரலுக்கு செவி கொடுக்கிறான் “ என்று கேட்ட பிலாத்திற்கு உலக அரசன் அளித்த பதில்.
அங்கே சாத்தானின் ஆட்சி தாண்டவமாடியது. ஆண்டவரின் ஆட்சி மவுனம் காத்தது.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்ப்போம். அதே வேளை அன்று இயேசுவு சுவாமிக்கு நடந்த இன்னல்கள் யாருக்காக நடந்தது என்பதையும் யோசிப்போம். நமக்காகவா அல்லவா அன்று தீர்ப்பிடப்பட்டார். நமக்காக அல்லவா அடிக்கப்பட்டார்... நமக்காக அல்லவா உடைக்கப்பட்டார்... நாமும் அவருக்காக இதுவரை ஏதாவது செய்திருக்கிறோமா..
அவருக்காக ஏதாவது செய்யவேண்டும் என்றால்..
முதலில் அடுத்தவரை தவறாக தீர்ப்பிடுவதை நிறுத்துவோம்...
அதுமட்டுமல்ல.. அடுத்தவரைப்பற்றி தவறாக மனதில் சிந்திப்பதையும் சேர்த்து நிறுத்துவோம்...
சில நேரத்தில் பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரைப் பற்றி தவறாக நம் மனதில் தீர்ப்பிட்டுக் கொண்டிருப்போம்...
அவர்களுக்கு அதாவது நமக்கு... நம் ஆண்டவரின் எச்சரிக்கை...
" தீர்ப்பிடாதே... தீர்ப்புக்குள்ளாவாய் "
மேலும் கனிவாக நம்மைப்பார்த்து கேட்கிறார்...
" அன்று என்னைத் தவறாக தீர்ப்பிட்டார்கள்.. ஆனால் நான் அதைத் தாங்கிக் கொண்டேன்...
ஆனால் பலவீனமான உன் சகோதரனோ... சகோதரியோ.. கனவனோ.... மனைவியோ... தாங்கிக்கொள்வார்களா???
ஆகையால்... என் மகனே... மகளே... யாரையும் தவறாக தீர்ப்பிடாதீர்கள்...?
எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி... தயவாயிரும்....
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠